இந்திய தேர்தல் முடிவுகள்; தற்போதைய நிலவரம் இதோ....!

breaking
மக்களவை தேர்தலில் 323 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாஜக கூட்ணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் சாத்தியம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி தொடங்கி கடந்த 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில்‌ 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணும் இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு. இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 306 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 103 இடங்களிலும் மற்ற கட்சிகள் 116இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை  திமுக  37 அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.