தற்போதைய தேர்தல் நிலவரம் எடப்பாடி முதல் மோடி வரை .!

breaking
தேர்தல் ஆணைய இணையதளத்தின் நிலவரப்படி ராகுல் காந்தி வயநாட்டில்  1,46,000 வாக்குகள் முன்னிலை, அமேதியில் 3,500 வாக்குகள் பின்னடைவு உத்தரபிரதேச மாநிலம் வாரணசியில் மோடி ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநில வயநாட்டில் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறார், கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ஜ.க பின்னடைவை சந்தித்துள்ளது.   மக்களவைத் தேர்தல் முன்னணி நிலவரம்! பா.ஜ.க கூட்டணி : 325 காங்கிரஸ் காட்டணி: 104
மற்றவை:  113     மீண்டும் தனி மெஜாரிட்டியில் பா.ஜ.க? மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தனி கட்சியாக பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 282 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்களே தேவை!   சொந்த மண்ணில் சறுக்கினார் முதல்வர் எடப்பாடி.! தமிழக மக்களவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி அனைத்து தொகுதிகளின் முன்னணி நிலவர வெளியாகியுள்ளது. அதில் தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும் அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது, சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் மைன்பூரி தொகுதியில் பின்னடைவு. அவர் மூன்று முறை வென்ற தொகுதி மைன்பூரி என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் 16,936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பின்னைடைவு! சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து  சுற்று நிலவரப்படி திருமாவளவன் 286 வாக்குகள் முன்னனியில் உள்ளார். அமேதியில் பா.ஜ.க  வேட்பாளர் ஸ்ம்ரிதி இரானி 2,000 வாக்குகள் முன்னிலை. ராகுல் காந்திக்கு தொடர்ந்து பின்னடைவு. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பின்னடைவு! தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்! இரட்டை சதம் அடித்த பாஜக! மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வெளியான முன்னணி நிலவரங்கள் படி பா.ஜ.க 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் (போபால்), சிந்தியா , விவேக் தன்கா (ஜபல்பூர்)  மூவரும் பின்னடைவு ராகுல் காந்தி பின்னடைவு! உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயநாடு தொகுதில் ராகுல் முன்னிலையில் இருக்கிறார். தி.மு.க முன்னிலை! தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். நீலகிரியில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.  தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 8 மக்களவைத்தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதிமுக இன்னுன் தனது கணக்கை தொடக்கவில்லை. பாஜக முன்னிலை! தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னணி நிலவரம் வெளியான 27 தொகுதிகளில் பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி  7 இடங்களிலும் முன்னணியில் உள்ளது,