நீராவியடிப் பிள்ளையாரில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது ஶ்ரீலங்கா காவல்துறையினர் தாக்குதல்

breaking
வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த கேமராக்களை உடனடியாக அகற்றுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் அவர்கள் கொக்கிளாய் காவல்துறை நிலைய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கிறார். ஊடகவியலாளர் கமராவையும் சேதப்படுத்தி அவரை தீய வார்த்தைகள் பேசி எச்சரித்ததாகவும் ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார்.