Take a fresh look at your lifestyle.

வீட்டுச் சிறையிலாவது ரிஷாத்தை வையுங்கள்; மஹிந்த கோரிக்கை

பங்கரவாதி சஹ்ரான், 2015 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு எதிராக செயற்பட்டவர் எனத் தெரிவித்துள்ள சிறிலங்காவின் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாத் பதியுதீனை வீட்டுச் சிறையிலாவது வைத்து விசாரிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் கூறியுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருந்தனர் என்றும், அளுத்கம மற்றும் பேருவளை கலவரங்கள் அரசியல் ரீதியானவை. அதை யார் செய்தார்கள் என்று தெரியும் எனவும் மஹிந்த கூறினார்.

சஹ்ரான் தனக்கு எதிராகவும், மைத்திரிக்கு ஆதரவாகவும் செயற்பட்டார் என்றும், சஹ்ரான் குழு தனது ஆட்சிக் காலத்தில் உருவாகத் தொடங்கியதை ஏற்றுக்கொண்ட மஹிந்த, அவர்களில் சிலருக்கு புலனாய்வுத்துறை பணம் வழங்கியதையும் ஏற்றுக்கொண்டார்.

எனினும், அவர்கள் சஹ்ரான் குழுவுக்குள் ஊடுருவிய புலனாய்வுத் துறை நபர்களே தவிர, உண்மையான சஹ்ரான் குழுவினர் அல்லவென்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையில் அனைத்து குற்றங்களையும் ரிஷாத்தின் தலையில் சுமத்திவிட்டு மற்றவர்கள் தப்பிக்க முயல்கின்றனர் எனவும், ரிஷாத் அரசின் ஒரு அங்கம் என்றும் மஹிந்த கூறினார்.

ரிஷாத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை போலத் தெரிகின்றன என் றும் ஆனால் விசாரணை இடம்பெறவில்லையயன்றும் தெரிவித்த அவர், குறைந்தபட்சம் வீட்டுச் சிறையிலாவது வைத்து அவரை விசாரிக்க வேண்டு மெனவும் சுட்டிக்காட்டினார்.