காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பழ. நெடுமாறன் அவர்கள் வரவேற்ப்பு.!

breaking
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.! காவிரி சூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். பிப்ரவரி முதல் மே மாதம் வரை மாதந்தோறும் 2.5 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் எற்கனவே அளித்த உத்தரவை கர்நாடகம் நிறைவேற்றவில்லை. அந்த நான்கு மாதங்களுக்குரிய 10 டி.எம்.சி நீரை கர்நாடகம் அளிக்க ஆவன செய்ய வேண்டும். என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன். ஆனால் கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மேலாண்மை வாரியத்தின் உத்தரவு குறி்த்து கர்நாடக மாநில அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்யபோவதாக அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு அரசியல் சட்டப்படி உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதைப்பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இத்தகைய கூட்டத்தைக் கர்நாடக அரசு கூட்டுவது அரசியல் சட்டத்தை மீறுகிற அடாவடிச் செயலாகும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கவனத்திற்கு இதை உடனடியாகக் கொண்டு செல்லவேண்டும். என தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன். அன்புள்ள பழ.நெடுமாறன்