விசுமடு மாணிக்க புரத்தில் காட்டுயானைகள் அட்டகாசம்!

breaking
வட தமிழீழம் ,முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு மாணிக்க புரத்தில் காட்டுயானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் பயன்தரு மரங்கள் அனைத்தும் சேதப்படுத்தியுள்ளன. விசுவமடு மாணிகபுரம் பகுதியில் 28.05.19 அன்று இரவு மக்கள் வாழ் இடங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் பயன்தரு மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் நேற்று இரவு மூன்றிற்கு மேற்பட்ட யானைகள் மக்கள் வாழ்இடங்களுக்குள் புகுந்துள்ளன. மாணிக்கபுரம் பிரதேசத்தில் உள்ள நான்கு விவசாயிகளின் காணி ஒன்றிற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மூன்றுதென்னங்கன்றுகளை முற்றாக சேதப்படுத்தியுள்ளதுன் வாளைத்தோட்டத்தினையும் சேதப்படுத்தி பலமரங்களில் உள்ள பலா காய்களையும் பிடிங்கி எறிந்துள்ளன. மக்களின் விவசாய செய்கைக்கு பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ன இந்த யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டில் இருந்த குடும்ப பெண்ஒருவர் யானையினை கலைக்க முற்றபட்ட வேளை அவரையும் யானை துரத்தியுள்ளது இதனால் அச்சமடைந்த குடும்ப பெண் அயலவர்களை அழைத்து உழவு இயந்திரம் கொண்டு யானைகளை விரட்டியடித்துள்ளார்கள். விசுவமடு பகுதியில் யானை வேலி அமைப்பதாக கூறி கடந்த ஆண்டு பல நடவடிக்கைகளக் எடுக்கப்பட்டு அதனை அடையாளப்படுத்தியும் இதுவரை யானை வேலிகள் அமைக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். நிதி ஒதுக்கப்பட்டும் யானைவேலிகள் அமைக்கப்படாமையினால் நாள்தோறம் மக்களின் விவசாய செய்கைகளை யானைகள் அழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.