Take a fresh look at your lifestyle.

அசாத் சாலிக்கு தூதுவர் பதவி: மைத்திரி திட்டமிடுவதாகத் தகவல்

மேல் மாகாண ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அசாத் சாலி, முக்கிய நாடொன்றுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துரலிய ரத்ன தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிலர் மேற்கொண்டு வந்த போராட்டம் காரணமாக அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றிய ஹிஸ்புல்லா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அசாத் சாலிக்கு அநீதி நடந்துள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி கருதுவதால், அவரை வெளிநாடு ஒன் றின் தூதுவராக நியமிக்க தீர்மானித்துள்ளார் எனப் பேசப்படுகிறது.

பெரும்பாலும் மலேஷியாவுக்கான தூதுவராக அவர் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.