தமிழர்களின் தீர்வு தொடர்பில் தள்ளிவைக்கும் செயல்களிலே அரசு ஈடுபடுகின்றது!

breaking
இந்த அரசாங்கம் எங்களுக்கு தீர்வுகைள வழங்காது இருப்பதற்காக காலத்திற்கு காலம் தமிழர்களை திசை திருப்புவதற்காக பல்வேறு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
10.06.19 அன்று சுதந்திரபுரம் படுகொலையின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
சுதந்திரபுரம் படுகொலை என்பது ஒரு வரலாற்று பதிவு இதில் 33 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் பலர் காயமடைந்துள்ளார்கள்.
இந்த படுகொலைகள் செய்யப்பட்டு எங்கள் உறவுகள் அநாதரவாக்கப்பட்டு இன்று பல ஆண்டுகள் கடந்து தமிழர்களுக்கு எந்தவிதமான நிதீயும் இன்றுவரை கிடைக்கவில்லை
இறுதிப்போரின்போது பலர் கொல்லப்பட்டார்கள் அதற்கு முன்னரும் பல தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இலட்சத்தினை தாண்டிவிட்டது ஆனால் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டாலும் தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை
படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கான தீர்வாகாலம்,காணாமல்  ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வாகலாம் அல்லது அரசியல் தீர்வாக இருக்கலாம் எந்த விதமான தீர்வுகளையும் சிங்கள அரசு வழங்க மறுக்கின்றது.
தொடர்ந்தும் மறுத்துவருகின்றது நாங்கள் இப்போது தொடர்ச்சியாக சர்வதேசத்தின் நியாயத்தினை கோரி நிக்கின்றோம்
இந்த அரசாங்கம் எங்களுக்கு தீர்வுகைள வழங்காது இருப்பதற்காக காலத்திற்கு காலம் தமிழர்களை திசை திருப்புவதற்காக பல்வேறு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இப்போது நாங்கள் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் தமிழர்களின் அரசியல் தீர்வினையும் தாண்டி அதனைத்தான் எல்லோரும் பேசுகின்றோம் இது அரசின் திட்டமிட்ட செயலாக பார்கின்றோம்.
தமிழர்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசியல் வேலைகளை தள்ளிவைக்கின்ற ஒரு வேலையாகவே அரசு இதனை செய்கின்றது.
இந்த குண்டுவெடிப்புடன் நாட்டில் அரசியல் ரீதியான ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்த தெரிவுக்குழுவினையே கலைக்கவேண்டும் பாராளுமன்றத்தினை நிறுத்தி வைக்கவேண்டும் என்று ஜனாதிபதி சொல்லிக்கொண்டிருக்கின்றார்.
இந்த படுகொலைகளை நாங்கள் நினைவிற்கொள்ளவேண்டும் இந்த படுகொலைகள் ஊடாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான செய்தி இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.