சிறையிலிருந்து சசிகலாவிடுதலையாகிறாரா .?

breaking
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற வி.கே. சசிகலா, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், அவர் எந்த விதிமீறலிலும் ஈடுபடாமல், அவர் மீது வேறு எந்தக் குற்றங்களும் இல்லை எனும் பட்சத்தில், கர்நாடக பரோல் விதிகளின் அடிப்படையிலும், நன்னடத்தை அடிப்படையிலும் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், கர்நாடக சிறை விதிகளின் படி, நீண்ட கால மற்றும் குறுகிய கால சிறைத் தண்டனை பெற்ற கைதிகளை, நன்னடத்தையைக் காரணம் காட்டி தண்டனையில் 4 இல் 3 பங்கு காலத்தை பூர்த்தி செய்துவிட்டாலே, அவரை விடுவிக்கலாம். எனவே, 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 2021ம் ஆண்டுக்கு பதிலாக 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலேயே விடுதலையாக அதிக வாய்ப்புகள் இருந்தன. ஆனால், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை கூட இல்லை, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே சசிகலா விடுதலையாக வாய்ப்பு உருவாகியுள்ளது. அதாவது, பெங்களூரு சிறைத் துறை நிர்வாகம் கர்நாடக அரசுக்கு சிறை நன்னடத்தை விதிகளின்படி டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே சிறைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று ஏராளமான சிறைக் கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலில் சசிகலாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்று உறுதி செய்யாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், சசிகலா இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே விடுதலையாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.