Take a fresh look at your lifestyle.

பேச்சுக்கு அழைத்தார் மைத்திரி: நிராகரித்தது தெரிவுக்குழு! தீவிரமடையும் முரண்பாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைத் தன்னுடன் பேச்சு நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஆயினும் அந்தக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது நாடாளுமன்றத் தெரிவுக்குழு.

ஜனாபதியின் இந்தக் கோரிக்கை இப்போது பொருத்தமானதல்ல என்றும் தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென்ற ஜனாதிபதியின் கோரிக்கை, ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரின் ஊடாக அறியக் கிடைத்ததாகவும் – பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரைச் சந்திப்பது தார்மீகமானதல்லவென தீர்மானிக்கப்பட்டதாகவும் மேற்படி குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி இவ்வாறு பேச்சுக்கு அழைத்திருக்கலாமெனக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே சபாநாயகர் இது விடயத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பதால் வேறு ஆள்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லையென்றும் கூறினார்.

நேற்றுத் தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கைகுறித்து விரிவாகப் பேசப்பட்டபோதும் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என அறியமுடிந்தது.