Take a fresh look at your lifestyle.

காருக்குள் மோடியுடன் தனிமையில் பேசியது என்ன? முகநூலில் ரணில் விளக்கம்

பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களின் அபிவிருத்தி மற்றும் ஜிகாதிதீ விரவாதத்துக்கு எதிரான போருக்குப் பயிற்சி மற்றும் விநியோக ஆதரவைப்பெற்றுக் கொள்வது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

கடந்த ஞாயிறு குறுகிய நேரப் பயணமாக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்று கொழும்புக்கு அழைத்து வந்தார்.

பின்னர் அவர், கொழும்பில் பேச்சுக்கள் மற்றும் சந்திப்புகளை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமரைக் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வழியனுப்பி வைத்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வாகனத்தில் வரும்போது, இந்திய – சிறிலங்கா பிரதமர்கள், காரில் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இதன்போது மிக முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுக்கள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க முகநூலில் தகவல்களை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டமைக்காகவும், நாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்காகவும் இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, இது நம்பிக்கையைப் பலப்படுத்தும் என்றும், இலங்கைக்கு இன்னும் அதிகமான மக்கள் வருவதை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் பயணத்தின் போது, சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்புப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதன் ஊடா கப் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.

சிறிலங்கா படைகளுடன் இந்தியா நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்றும், தீவிரவாத முறியடிப்பு பயிற்சி மற்றும் விநியோக ஆதரவை வழங்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொண்டேன்.