Take a fresh look at your lifestyle.

ஹிஸ்புல்லாவிடம் வியாழக்கிழமை தெரிவுக்குழு விசாரணை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதா தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவினால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை அவர் தெரிவுக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளார்.

நேற்றைய தினம் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலியிடம் தெரிவுக்குழுவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து வியாழக்கிழமை ஹிஸ்புல்லாவிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் பிரதிநிதியொருவரிடம் அந்த குழு சாட்சியத்தை பெற்றுக்கொண்டிருந்ததுடன் அகில இலங்கை ஜமயத்துல் உலமாவின் தலைவரிடமும் சாட்சியத்தை பெற்றுக்கொண்டிருந்தது.