Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி – பாராளுமன்ற முரண்பாட்டால் பாரிய நெருக்கடி: தயாசிறி எச்சரிக்கை

பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை நிறுத்­து­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கேட்டுக் கொண்ட போதிலும் அதனை கவ­னத்தில் கொள்­ளாமல் மீண்டும் தெரி­வுக்­குழு கூடி­ய­மையால் நேற்று ஜனா­தி­பதி அமைச்­ச­ர­வையைக் கூட்­ட­வில்லை. இவ்­வாறு அர­சாங்­கத்­துக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் அதி­க­ரிக்­கு­மானால் நாடு பாரி­ய­தொரு நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுக்க நேரிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது :

தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்­களும் சபா­நா­யகர் கரு­ஜய சூரி­யவும் நாளை (இன்று) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்­ள­தாக தக­வல்கள் கிடைத்­துள்­ளன. அவ்­வாறு சந்­திப்பு இடம்­பெ­று­மானால் அதனை நாம் வர­வேற்­கின்றோம். இந்த சந்­திப்பின் மூல­மா­வது முரண்­பா­டு­களை களைந்து தீர்க்­க­மான முடி­வொன்று எடுக்­கப்­பட வேண்டும்.

சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்க தயா­ராகி வரு­கின்­ற­மையால் அவ­ருக்கே உரிய பொறுப்­புக்­களை ஒரு புறம் ஒதுக்கி வைத்­து­விட்டு பக்கச் சார்­பாக செயற்­ப­டு­கின்றார். நிலை­யியற் கட்­ட­ளை­களை மீறி இடம்­பெறும் செயற்­பா­டு­க­ளுக்கு அவர் வாய்ப்­ப­ளித்­துள்ளார். இது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

ஐக்­கிய தேசிய கட்­சியும் , கூட்டு எதிர்க்­கட்­சியும் இணைந்து தான் தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தார்கள். அதில் பாது­காப்பு அல்­லது புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் என்று யாரை வேண்­டு­மா­னாலும் அழைக்க முடியும் என்றும், ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­படும் என்றும் அர­சாங்கம் சில யோச­னை­களை முன்­வைத்­தது. இவை ஜனா­தி­ப­தியை இலக்கு வைத்தே முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் இந்த விடயம் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என்று யாரும் சிந்­திக்­க­வில்லை.

தெரி­வுக்­கு­ழுவில் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டுகள் குறித்து பேசு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் அதி­கா­ர­மில்­லாமல் போயுள்­ளது. இங்கு சாட்­சி­ய­ம­ளிக்கும் அதி­கா­ரி­களும் பல்­வேறு வகையில் நெருக்­க­டி­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இவ்­வாறு புல­னாய்­வுத்­துறை அதி­கா­ரிகள் வழங்கும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வதால் முடங்­கி­யுள்ள பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் மீளவும் எழு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. இது குறித்தும் தெரி­வுக்­குழு உறுப்­பி­னர்கள் சிந்­திக்க வேண்டும்.

ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி தாக்­கு­தல்கள் தொடர்பில் தகவல் கிடைத்­த­தாக பலரும் கூறு­கின்­றனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தனக்கு தகவல் கிடைக்கப் பெற்­ற­தாக அத­னை­உ­ரிய தரப்­புக்கு அனுப்­பி­ய­தா­கவும் தெரி­வுக்­கு­ழுவில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். ஆனால் அவர் தகவல் கிடைக்கப் பெற்ற போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி வெளி­நாட்­டுக்குச் சென்று 16 ஆம் திகதி தான் நாடு திரும்­பினார். இது குறித்து தெரி­வுக்­குழு ஏன் ஆரா­ய­வில்லை? தாக்­கு­தல்கள் தொடர்பில் தகவல் கிடைத்­தி­ருந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­காது அவர் வெளி­நாடு செல்­வ­தற்­கான காரணம் என்ன என்­பதே எமது கேள்­வி­யாகும். அதே வேளை பொலிஸ் மா அதி­பரும் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை.

கடந்த பெப்­ர­வரி மாதத்­திற்கு பின்னர் பாது­காப்பு சபை கூட­வில்­லையா என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேக்கா பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் , முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ரி­டமும் கேள்வி எழுப்­பினார். ஆனால் பாது­காப்பு சபைக்கு பதி­லாக அதை­யொத்த வாராந்தம் கூடிய பாது­காப்பு குழு குறித்து அவர் அவ­தானம் செலுத்­த­வில்லை.

இந்த தெரி­வுக்­குழு என்­பது முற்­று­மு­ழு­தாக ஜனாதிபதிக்கு சேறு பூசுவதற்காக அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒரு அரசியல் நாடகமாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் குறித்த தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளன. ஆனால் முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தத்தின் காரணமாக அவை மறைக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் வெறும் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. ஆதாரங்களும் முன்வைக்கப்பட வேண்டும்.