இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

breaking
  மக்களின் நிலங்களை சுவீகரித்து இல்மனைற் அகழ்வு மேற்கொள்ளப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப்  எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில்  வாகரைபிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள், கிழக்கு பல்கலைக்கழ மாணவர்கள், கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் தமிழ் தேசியமுன்னணி உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் இணைந்து வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி எனும் இரு இடங்களில் முறையே 42 acre,17acre பரப்புகாணிகள் உள்ளடங்களாக இல்மனைற்று தொழிற்சாலையை அமைக்கப்படுவதையும் , மேலும் இதற்காக கரையோரமாக 48Km நீளம் வரை அபகரித்தையும் (30 வருட திட்டம் இதனை ஏக்கநாயக்க என்ற பொறியியலாளரூடாக Al chemy metal (pvt) ltd செயற்படுத்துகின்றது.) எதிர்த்தே போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் விவசாயம் மீன்பிடி தொழில் நேரடியாக பாதிக்கப்படுவதோடு பாரிய இயந்திரபாவனையின் அதிர்வுகள் மீன்கள் ஆழ்கடல் நோக்கி பயணிக்கும் நிலையும் ஏற்படும். மண்ணின் இயற்கை கட்டமைப்பு உடைவதால் உப்பு வடிகட்டப்படாது நன்னீர் உவர் நீராகும் இதனால் விவசாயம் பாதிப்படையும் கால்நடைகள் பாதிப்படையும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். கடலரிப்பு ஏற்பட்டு பூர்வீக நிலம் கடலினுள் செல்லும் சுகாதாரப் பிரச்சனைகள், சத்தம்,தூசிகள், சுவாசநோய்கள் அதீத வரட்சி(1000'C வரையான வெப்பம் வெளிவிடப்படுகிறது) கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படும். இதே வேளை மண் சுத்திகரிப்புக்காக வெருகல் ஆற்றில் ஆள்துளைக்கிணறுகள் வைக்கப்படும் நீர் உறிஞ்சப்படுவதால் கடல்நீர் ஆற்றினுள் வரும் ஆற்றை அண்டிய சேனைப்பயிர்ச் செய்கை பாதிப்படையும் நிலத்தடி நீர் வற்றும் 10 வருடங்களின் பின்னர் வலது குறைந்த மீதிறனற்ற குழந்தைகள் பிறக்கும். ஆபத்துகளை எதிர் நோக்க வேண்டி வரும் என தெரியவருகிறது.