Take a fresh look at your lifestyle.

அசாத் சாலிக்கு ஹிஸ்புல்லா இன்று பதிலடி: தெரிவுக்குழு முன் வருகின்றார்

நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னால் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சொன்ன விடயங்கள் உண்மையானவையா என்பது குறித்து இன்று விளக்கிக் கூறுவேன் எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தார். தேசிய தெளஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன் கடந்த தேர்தல் காலங்களில் ஒப்பந்தமொன்றைச் செய்திருந்தார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முன்னைய தேர்தல் காலங்களில் அப்படியான ஏற்பாடுகள் நடந்திருந்தன. அதைத்தான்அசாத் சாலி கூறியிருக்கக்கூடும். எப்படியோ இன்று மாலை 5 மணிக்கு நான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளேன்.அப்போது எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவேன்” என்றார்.

குறிப்பு:>