இவரும் பறந்தார் அவரும் பறந்தார்.?

breaking
மைத்திரிபால சிறிசேன மற்றும்  ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அதன்படி  மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தஜிகிஸ்தான் செல்கின்றார். தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே  அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாக சிங்கள ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மைத்திரியின்  இந்த விஜயத்தின் போது அந்நாட்டின் உயர் மட்ட அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது மேலும் சிங்கள  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 308 விமானத்தின் மூலம் நேற்று நண்பகல் 12.15 மணியளவில் பிரதமர் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் ரணில் சிங்கப்பூர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விஜயத்தில்  ரணிலுடன்  மேலும் இருவர் கலந்துகொண்டுள்ளனர். ரணில்  உள்ளிட்ட குழுவினர்  14ம் திகதி மீண்டும் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.