Take a fresh look at your lifestyle.

முஸ்லீம்கள் மீதான அழுத்தங்கள் தொடர்பில் கரிசனை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன்

 

ஶ்ரீலங்காவின் முஸ்லிம் சமூ­கத்தை நோக்­கிய அர­சியல் மற்றும் மத ரீதி­யான அழுத்­தங்கள் தொடர்பில் நாங்கள் அதி­க­ளவு கவனம் செலுத்­தி­யுள்ளோம். இந்த நட­வ­டிக்­கைகள் சமா­தானம் மற்றும் ஒரு­மைப்­பாடு செயற்பா­டு­க­ளுக்கு தடங்­க­லாக அமைந்­துள்­ள­தாக நாங்கள் கருதுகின்றோம்.

எனவே இந்த நிலை­மையை மாற்­றி­ய­மைக்க நட­வ­டிக்கை எடுக்குமாறு ஶ்ரீலங்கா ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் ஏனைய அர­சியல் தலைவர்­க­ளி­டமும் கோரிக்கை விடுக்­கின்றோம் என்று ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் மற்றும் பிரிட்டன் என்­பன அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

இது தொடர்பில் பிரான்ஸ் ஜேர்­மனி இத்­தாலி நெதர்­லாந்து ரொமே­னியா சவிட்­சர்­லாந்து நோர்வே நாடு­களின் உடன்பாட்டுடன் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் பிரிட்­டனும் இணைந்து விடுத்­துள்ள அறிக்­கையில் இவ்­வாறு தெரிவிக்கப்பட்டுள்­ளது.

முன்­ன­தாக இந்த நாடு­களின் தூது­வர்கள் நேற்­றுக்­காலை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்சு நடத்­தி­ய­போது இந்த விடயங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டது. இந்த நிலை­யி­லேயே மேற்கண்ட அறிக்கை வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.அந்த அறிக்­கையில் இலங்­கையின் முஸ்லிம் சமூ­கத்தை நோக்­கிய அர­சியல் ரீதி­யன அழுத்­தங்கள் தொடர்பில் நாங்கள் அதி­க­ளவு கவனம் செலுத்­தி­யுள்ளோம். இந்த நட­வ­டிக்­கைகள் சமா­தானம் மற்றும் ஒரு­மைப்­பாடு செயற்­பா­டு­க­ளுக்கு தடங்­க­லாக அமைந்­துள்­ள­தாக நாங்கள் கரு­து­கின்றோம்.

தவ­றான எண்­ணத்தை தோற்­று­விக்கும் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாத குற்றச்­சாட்­டுக்­களை ஊட­கங்கள் தொடர்ச்­சி­யாக வெ ளியி­டு­கின்­றமை பொறு­மை­யின்­மையை தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளன. இது தொடர்பில் பிர­த­ம­ருடன் நேற்று நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யின்­போது எமது கருத்­துக்­களை பகிர்ந்­து­கொண்டோம்.

இதன்­போது வெறுக்­கத்­தக்க பேச்­சுக்­க­ளுக்கு எதி­ரா­கவும் மதங்களுக்கு இடையில் ஒரு­மைப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் அமைப்பை நிறு­வு­வ­திலும் அர­சாங்கம் காண்­பிக்கும் அர்ப்பணிப்பான செயற்­பா­டு­களை நாம் வர­வேற்றோம்.

எனவே சகல சமூ­கங்­க­ளுக்கு இடை­யிலும் சமா­தா­னத்தை பேணி நிலை­நி­றுத்­து­வது தொடர்பில் அனைத்து இலங்­கை­யர்­க­ளு­டனும் நாம் பக்­க­ப­ல­மாக இருக்­கின்றோம்.

சமய தலை­வர்கள் அவர்­களை வழி நடத்தி வன்­மு­றை­க­ளுக்கு எதிராக குர­லெ­ழுப்­ப­வேண்டும் எனவும் எதிர்­பார்க்­கின்றோம்.

அனை­வ­ருக்கும் பொது­வான சட்­டத்தின் கீழ் மத அல்­லது இனவே­று­பா­டின்றி பரஸ்­பர மதிப்பு சகிப்பு மற்றும் சம­மாக நடத்தல் போன்­ற­வற்­றுக்­கான விட­யங்­களில் அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்­டு­மாறு ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் ஏனைய அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் கூட்­டாக கோரிக்கை விடுக்­கின்றோம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கொழும்பில் உள்ள ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூது­வர்கள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை நேற்­றைய தினம் அலரி மாளி­கையில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து முஸ்லிம் பிர­தி­நி­திகள் இரா­ஜி­னாமா செய்­தமை தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூது­வர்கள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கவலை வெ ளியிட்­டுள்­ளனர்.

இச் சந்­திப்பு தொடர்பில் பிர­தமர் அலு­வ­லகம் வெ ளியிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது

இச் சந்­திப்­பின்­போது நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள தற்­போ­தைய நிலை­மைகள் குறித்து விரி­வாக பேசப்­பட்­டது. . “

மிலேச்­சத்­த­ன­மான அடிப்­ப­டை­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தற்கு தமது ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தா­கவும் அதற்கு நிதி­யு­தவி செய்­வ­தற்கு தயார் என்றும் ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தூது­வர்கள் உறுதிய­ளித்­துள்­ளனர்.

அத்­துடன் அண்­மையில் ஊட­கங்­களில் வைராக்­கிய கூற்­றுக்கள் வெளியானதாக தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அவ்வாறான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டனர்.

மேலும் அமைச்சரவையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்தமை தொடர்பில் கவலை வெ ளியிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் அவர்களை மிக விரைவில் மீண்டும் அமைச்சரவையில் இணைந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.