ஈழத்தின் மாவீரர்கள் மண்ணில் சொகுசு வாகனத்திற்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள்

breaking
  கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களது தவிசாளர்கள் நாட்டில் எது நடந்தாலும் தமது கல்லாவை கவனிப்பதில் பின்னிற்பதேயில்லை.குறிப்பாக பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நிதியில்லையென பஞ்சம்பாடும் தவிசாளர்கள் மறுபுறம் தங்களிற்கு சொகுசு வாகனங்களை வாங்கி அனுபவித்துவிட பாடாய்படுகின்றனர். ஏற்கனவே யாழ்.மாநாகரசபை முதல்வர் சொகுசு வாகனத்திற்கு போராடி தற்போது முன்னாள் முதலமைச்சர் பயன்பாட்டிலிருந்த வாகனத்தை பெற்று ஓய்ந்துள்ளார். இந்நிலையில் யுத்த கடுமபாதிப்பை சந்தித்த புதுக்குடியிருப்பு,கரைச்சியென தற்போது பச்சிலைப்பள்ளி பிரதேசசபை வரை தவிசாளருக்கு பிக்கப் கோரிக்கைகளினை முன்வைத்திருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் வெறுமனே 3ஆயிரத்து 975 குடும்பங்களே வாழ்ந்துவருகின்றன. யுத்தத்தின் அவலத்தின் மத்தியில் அதிலும் முன்னரங்க போர்ப்பகுதியாக இருந்த முகமாலை,கிளாலி மற்றும் பளை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளரே தற்போது சபை நிதியினில் சொகுசு வாகனம் கேட்டு களமிறங்கியுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.