Take a fresh look at your lifestyle.

விபத்தினை ஏற்படுத்திய விமானப்படையினன் கைது!

 

வடதமிழீழம் கிளிநொச்சி இராமநாதபுரம் பகதியில் ஸ்ரீலங்காப்படையின் விமானப்படையினரின் ஜீப்வண்டி மோதிக்கொண்டதில்  தமிழ் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விமானப் படையின் ஜீப் வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதியதில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதித்த பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஜீப்வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>