இலங்கையில் அரபு மொழி பாடசாலையை உருவாக்க பயங்கரவாதிகள் திட்டம் !

breaking
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியின் வீட்டிலிருந்து அரபுமொழி பாடசாலையொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவமொன்றை குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அஸாம் மொஹமட் முபாரஹ் அலியாஸ் அப்துல்லாஹ் என்பவரின் கொலன்னாவை வீட்டிலிருந்தே இவ்வாறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அத்தோடு, அந்த விண்ணப்பத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இமூரா லெப்பை மொஹமட் ஸாஜித் என்பவரின் கையொப்பம் இடப்பட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்தரமுல்லை மற்றும் நிந்தவூர் பகுதிகளில் தங்கியிருந்த நிலையில், அவர்கள் நுவரெலியா பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.