முல்லைத்தீவு மாவட்ட மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில்!

breaking
சுகாதார அமைச்சர் ராஜீத சேனராத்தினவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்  கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து  மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி   இன்று (13) மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வாயிலுக்கு  முன் மதியம் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் வரை குறித்த போராட்டம் இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் ஏந்திய பதைதகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்தது.
இதன்போது சுகாதார அமைச்சர் றாஜித சேனாரனவுடைய குடியியல் உரிமை இல்லாதொழிக்கப்படவேண்டியது ஏன் என்ற துண்டுப்பிரசுரமும் செல்பவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், ஒளடத அதிகாரத்தை மாபியாவிடத்தில் கையளிக்காதே,இலங்கை மருத்துவ சங்கத்திற்கு அரசியல் தலையீடு செய்யாதே,உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது