அகதிகளுக்கு உதவிய நிறுவனத்தை அடித்து விரட்டிய சிங்கள காடையர்கள்!

breaking
இலங்கையில் தங்கியிருக்கின்ற பாக்கிஸ்தான் அகதிகளுக்கு உதவிய செய்த பன்னாட்டு நிறுவனமொன்றை சிங்கள காடையர்கள் அடித்து விரட்டிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் நடைபெற்றுள்ளது. நீர்கொழும்பில் இயங்கிவந்த குறித்த நிறுவனம் அகதிகளுக்கு உதவினர் என்கின்ற காரணத்திற்காக சிங்கள காடையர்களால் அந்த நிறுவனத்தின் பாதுகாவலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் அதன் பின் சிறிங்கா இராணுவத்தாலும் காவல் துறையாலும் தொடர்ந்து வந்த அச்சுறுத்தல்களை அடுத்து அந்த நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் விடுமறையில் செல்ல அந்த பன்னாட்டு தொண்டு நிறுவனம் அவர்களுடைய நிறுவனத்தை முற்றுமுழுதாக மூடியுள்ளனர். குறிப்பாக சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கு முன்னதாக எவ்வாறு தமிழீழ பிரதேசங்களில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களை வெளியேற்றிவிட்டு தமிழ்மக்களை அழித்தொழித்தார்களோ அதே மனநிலையிலேயே சிங்கள தேசம் இன்றும் இருக்கின்றது என்பதன் வெளிப்பாடே இந்த சம்பவமாகும்.   குறிப்பு:பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவனத்தின் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.