Take a fresh look at your lifestyle.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாயதான்: பந்துல உறுதி

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டா என்பது உறுதியான விடயம் என தெரிவித்த எதிரணி நாடளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எவரைக் களமிறக்கினாலும் படுதோல்வியடையும் எனவும் கூறியுள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்கங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்\ என்பதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யாரை களமிறக்கினாலும் படுதோல்வியையே சந்திக்கும்.

முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொண்ட அரசின் செயற்பாடுகளின் காரணமாகவே பொருளாதாரம் வீo;ச்சியடைந்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலைத் தொடர்ந்து அரசின் அனைத்து மோசடிகளும் முழுமையாக மறக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்களின் மோசடியே ஐ.தே.க.வின் பிரதான பலவீனம். கடந்த அரசின் செயற்பாடுகளுக்கு காட்டும் அக்கறையினை நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் காட்டுவதில்லை” என்றார்.

குறிப்பு:>