Take a fresh look at your lifestyle.

யாழ்ப்பாணம் வந்தார் அத்துரலிய தேரர்: இரு நிகழ்வுகளில் இன்று பங்கேற்பு

சர்ச்சைக்குரிய எம்.பி அத்துரலிய ரத்ன தேரர் நேற்று மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அவருக்கு தொண்டராசிரியர்கள் சிலர் காலில்விழுந்து வரவேற்பளித்தனர். இன்று யாழ்ப்பாணத்தில் நடக்கும் இரண்டு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.

முற்பகல் 11 மணிக்கு நாக விகாரையில் நடைபெறும் பொசன் தின நிகழ்வில் கலந்து கொள்கிறார். பின்னர் சர்வமதக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இலங்கை வேந்தன் கல்லூரியில் நடக்கும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்பார்.

நேற்று இரவு ஹோட்டல் ஒன்றில் அத்துரலிய ரத்ன தேரர் தங்கினார். அங்கு தொண்டர் ஆசரியர்கள் தேரரைச் சந்தித்து, தமது நிரந்தர நியமனம் குறித்து அக்கறை செலுத்தும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்கள் தேரரின் காலில் விழுந்து வணங்கி வரவேற்பு செலுத்தியிருந்தனர்.

குறிப்பு:>