ஜூலியன் அசாஞ்சினை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் அனுமதி .!

breaking
விக்கி லீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சினை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் திட்டத்துக்கு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்க நீதித்துறையினால் தேடப்படும் நபராக உள்ள ஜூலியன் அசாஞ் மீது அமெரிக்காவில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் லண்டலினுள்ள ஈக்குவடோர் தூதரத்தில் கைது செய்யப்பட்ட அசாஞ் லண்டனில் சிறைவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சுவீடன் அரசினால் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டு அவர்மீது  தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரை தமது நாட்டுக்கு நாடுகடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது. அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க அசாஞ்சினை நாடுகடத்தும் திட்டத்துக்கு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். எனினும் நீதிமன்றமே அசாஞ்சினை நாடுகடத்தும் முடிவினை உறுதிசெய்யும். நாளையதினம் வெள்ளிக்கிழமை வெஸ்ற்மின்ஸ்ரர் மஜிஸ்ற்ரேட் நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சின் வழக்குவிசாரணை நடைபெறவுள்ளது.