விளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.!

breaking
எரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 40 இடங்களில் 341 கிணறுகள் அமைக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது. எரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டிருக்கிறது. அதில் மிக எளிமையான முறையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வாழ்வாதாரத்தை வளர்க்கும் திட்டமா அல்லது அழிக்கும் திட்டமா என்பதனை விளக்கிக்கூறப்பட்டுள்ளது. டெல்டா என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? அதை எவ்வாறு எடுப்பது என்று விளக்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்படுவது குறித்தும், நிலத்தடி நீர் குறைவது, சட்டபூர்வமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் வழங்கப்படாமல் இருப்பது என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி கேட்டிருக்கிறது. உலக உணவு வணிக அரசியலுக்கு அரசு துணை போகின்றதா என்று துணைக்கேள்வி எழுப்பியுள்ளது அக்காணொலி. மண்ணிற்கு அடியில் தங்கமே இருந்தாலும் அது விளைநிலமாக இருப்பின் புறக்கணித்திட வேண்டும் என்று சொல்லி விளைநிலத்தை காத்திட வேண்டும் என்று விழிப்புணர்வினை உருவாக்கிடும் வகையில் இந்த காணொலி இருக்கிறது.