மாங்குளத்தில்  புதிதாக அரச வீட்டு திட்டம் அமைக்கும் முயற்சி மக்கள்  எதிர்ப்பு!

breaking

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 2012ஆம் ஆண்டு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டு  ஒரு லட்சம் ரூபா மானியமாகவும் 2 லட்சம் ரூபாய் கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் 50 பெயருக்கான வீடுகள் அமைக்கப்பட்டன

 குறித்த பகுதியில் வீடுகளை அமைத்து  அங்கு குடியேறும் அரச உத்தியோகத்தர்களுக்கான மின்சார வசதி வீதி வசதிகள் குடிநீர் வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த இடத்தில் இன்று வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை இந்நிலையில் குறித்த வீடுகள் அனைத்தும் பத்தைகள் மூடி  காடாக கிடைப்பதோடு அந்த பகுதியில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற  போதும் இந்த வீட்டுத்திட்டத்தில் மக்களை குடியேற்றுமாறு பல தடவைகள் மாவட்ட மட்டங்களில் பிரதேச மட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் தெரிவித்தும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் குறித்த பகுதியில் வீட்டு திட்டத்தை பெற்றுக் கொண்டவர்கள் பலர்  இரண்டாவது தடவையாகவும் வேறு இடங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொண்டு அந்த இடத்தில் குடியேறி இருக்கிறார்கள்

மக்கள் ஒரு இடத்தில் கூட வீடு பெறமுடியாத நிலை இருக்கின்ற போதும் அரசினுடைய சலுகைகளை இரண்டுமுறை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காது குறித்த வீட்டுத்திட்டம் எந்த பயன்பாடுமாற்ற நிலையில் சடடவிரோத செயற்பாடுகளின் மையமாக மாறியுள்ள நிலைமை இவ்வாறு இருக்க குறித்த இரண்டாவது வீட்டையும் பெற்ற அதிகாரிகளிடமிருந்து குறித்த  வீடுகளை மீள பெற்று   வீடு

 இல்லாதவர்களுக்கு வழங்கவோ அல்லது அவர்களை குடியிருத்தவோ  எந்த ஒரு அதிகாரிகளோ மாவடட அபிவிருத்தி குழுவோ  இதுவரை ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவில்லை

இது இவ்வாறு இருக்க துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நந்தகுமார் நகர் மாதிரி கிராமத்தில் அமைக்கப்பட்ட வீட்டுத்திடடத்தில் அரசு அலுவலர்களுக்கென வழங்கப்படட  வீடுகள் பூட்டிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் அதேபோன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வடகாடு பகுதியில் அமைக்கப்பட்ட கைலாய வன்னியன் மாதிரி கிராமம் பண்டாரவன்னியன் மாதிரி கிராமம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் அமைக்கப்பட்டவீடுகளில்  அரச உத்தியோகத்தர்களின் வீடுகள் பூட்டப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்படுகின்ற வீடுகள் தொடர்ச்சியாக பயன்பாடற்று  கிடக்கின்ற நிலையில் இப்போது புதிதாக a9 வீதி மாங்குளத்தில் ஒரு அரசை விட்டு திட்டத்தை கொண்டு வருவதற்காக அரசு அதிகாரிகள் மும்முரமாக முயற்சித்து வருகிறார்கள்

குறிப்பாக இன்று வரை இவ்வாறு மக்கள் குடியிருக்காத அரச உத்தியோகத்தர்கள் குடியிருக்காத வீடுகளில் மக்களை குடியமர்த்த முடியாத  அதிகாரிகள் புதிதாக  அரச உத்தியோகத்தர்களை இலக்காக கொண்டு வீட்டுத்திட்டம் அமைப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

குறிப்பாக இந்த வீட்டுத்திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் ஏ9 வீதியின் பிரதான வீதிக்கு அருகில் காணிகளை பிடிப்பதற்காகவா இந்த வீட்டுத் திட்டத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது வீட்டுத் திட்டங்களை அமைப்பது பல இடங்கள் இருக்கின்ற போதும் A -9  வீதியை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வீட்டுத் திட்டத்தை அரச உத்தியோகத்தர்களுக்கு என அமைப்பதானது  பனிக்கன்குளம் வீட்டுத்திட்டம் போன்று ஏனைய வீட்டுத் திட்டங்கள் போன்ற ஒரு நிலைமைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளமையினால் இந்த வீட்டுத் திட்டத்தை நிறுத்தி உரிய இடங்களில் பொதுமக்களோடு சேர்த்து வீட்டுத் திட்டங்களை வழங்குமாறும் இவ்வாறு வழங்குவதால் பல்வேறு சிக்கல் நிலைமைகள் தோற்றம் பெறும் எனவும் தொடர்ச்சியாக இந்த வீட்டுத்திட்டத்திற்கு அதிகாரிகளை துணைபோகாது ஏற்கனவே வழங்கப்பட்ட வீடுகளில் அதிகாரிகளை குடியேற்றி அதன் பின்னர் படிப்படியாக ஏனைய இடங்களுக்கு செல்லுமாறு மக்கள் கூறுகின்றனர் இருப்பினும் மக்களுடைய எந்த கோரிக்கையையும் செவிசாய்க்காது புதிதாக வீட்டுத் திட்டத்தை அமைத்து எ-9 வீதியோரத்தில் காணிகளை பெறுவதற்காக சில தரப்புக்கள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

எனவே இவ்வாறான ஒரு நிலைமையில் இருந்து குறித்த பகுதியில்  நிரந்தரமாக வாழ்கின்ற மக்களுக்கு கூட எதிர்காலத்தில் அரச திணைக்களங்கள் வர  இருக்கின்றது என்று காணிகளை வழங்காத பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் தற்போது அரசு அதிகாரிகளுக்கு குறித்த இடத்தில் காணியை வழங்கி வீட்டுத்திட்டம் வழங்குவதன் உத்தி என்ன என்பது தொடர்பான குழப்ப நிலையில் மக்கள் இருக்கின்றார் எனவே குறித்த வீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டு உரிய முறையில் ஏற்கனவே வழங்கப்படட வீடுகளை பாவனை உள்ளதாக மாற்றிவிட்டு புதிதாக வேறு ஒரு இடத்தில் அவர்களுக்கு தேவையாயின் அந்த வீட்டுத் திட்டங்களை வழங்குமாறும் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்ய வேண்டாம் எனவும் மக்கள் கோரி நிற்கின்றனர்