மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவதற்கு ஆலோசனை செய்த சிங்கள சேவகனும் ஆக்கிரமிப்பு கடற்படை தளபதியும்

breaking
வடக்கு மாகாணத்திற்கு பேரினவாத ஶ்ரீலங்கா அரசால் நியமிக்கப்பட்ட புதிய கடற்படைக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் கபில சமரவீர சிங்கள சேவகரான வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தார். சந்திப்பில் வடமாகாணத்தில் காணப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், கடற்படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள், நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சொந்தமான புனித பூமி மற்றும் மக்களின் காணிகளை விடுவிப்பு, மீனவர்களுக்கும் கடற்படையினருக்குமிடையில் சுமூகமான நிலமைகளைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வெளிச்செய்திகளிற்கு இவற்றை கூறிக்கொண்டாலும் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலின்படி தமிழ் மக்கள் மீது அடக்கு முறைகளை எவ்வாறு ஏவி விடலாம் என்பதே இவர்களது சந்திப்பின் சாராம்சமாக இருக்கும்