போரின் வலியினை சுமந்த பெண்களின் வாழ்வு இன்றும் இன்னல்களுக்குள்!

breaking
வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் அதிகளவான பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் காணப்படுகின்ற போதும் இன்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வி பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் காணப்படுகின்றார்கள் இன்றும் போரின் வலிகளை சுமந்து வாழ்ந்து வருகின்றார்கள் பலர் தங்களால் முயன்ற வாழ்வாதாரத்தினை கொண்டு தங்கள் குடும்பத்தினை நகர்த்துகின்றார்கள். லர் அவயங்களை இழந்தவர்கள் மற்றும் சில வெளிநாட்டவர்களின் உதவியுடன் வாழ்ந்துவரும் நிலையில் வடக்கு கிழக்கில் மக்கள் பிரதி நிதிகள் என்று சொல்பவர்களால் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்காக என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஜந்து ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து சிங்களத்திற்கு சேவகம் செய்ததே கூட்டமைப்பின் வேலையா வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் பொருளாதாரத்தினை விருத்தி செய்ய இவர்கள் என்ன செய்தார்கள் வீதிபோட்டார்கள்,பாலம் கட்டினார்கள்,கோவில்கட்டினார்கள், இதைத்தான் இவர்களால் செய்யமுடிந்தது. குடியிருப்புக்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவிற்கு இவர்களால் ஏதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றம் எழுந்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்று சிங்கள அரசாங்கத்தின் சமுர்த்தி நிவாரணத்தினையும்,கம்பெர்லிய திட்டத்தின் அபிவிருத்திதிட்டங்களையும் தாங்கள்தான் கொண்டுவந்தது என்று பறை சாற்றி அடுத்த கட்ட தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பொருளாதாரத்தினை மேம்படுத்தக்கூடிய வகையில் தொழில் வாய்ப்பினையோ,அல்லது உற்பத்தி நிறுவனங்களையோ அமைத்து கொடுக்காதக கூட்டமைப்பு உறுப்பினர்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் அடுத்த கட்ட தேர்தலுக்கு வீடு தேடி வந்தார்களாக இருந்தால் தக்கபதில் கொடுப்போம் என்று வடக்கு கிழக்கில் உள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்ப பெண்கள் தெரிவித்து வருகின்றார்கள். மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள் ஜந்து ஆண்டுகள் அனுபவித்த சுகபோகங்களை மீண்டும் அனுபவிக்க துடிப்பார்கள் மக்களே அவதானம் மக்கள் பிரதி நிதிகளே நீங்கள்தான் பதில்சொல்லவேண்டும்!