ஶ்ரீலங்காவின் சுகாதார அமைச்சருக்கு எதிராக வுவனியா வைத்தியர்களும் ஆர்ப்பாட்டம்

breaking
  ஶ்ரீலங்கா: சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்களால் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டின் சுகாதார சேவைக்கு மிகப்பாதகமான முறையில் நடந்துகொள்வதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அத்துடன், அமைச்சரின் முறைகேடுகள் தொடர்பாக தாம் ஆதாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ள போதிலும் இதுவரை காலமும் அவருக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அமைச்சரின் குடியியல் உரிமை பறிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச குற்றச்சாட்டுகள் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.