11 இளைஞர் கடத்தி காணாமல் ஆக்கப்பட் வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் பிணையில்

breaking
  11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11வது சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கின் 11 ஆவது சந்தேகநபரான ஶ்ரீலங்கா கடற்படையின் சஞ்ஜீவ பிரபாத் சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெத்திகே முன்னிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 11 ஆவது சந்தேகநபரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும், ஒன்றரை இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். சந்தேகநபரின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு வெள்ளை வானில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.