Take a fresh look at your lifestyle.

குருநாகல் வைத்தியருடன் பணிபுரிந்து 69 தாதியர்களிடம் விசாரணை

 

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபியுடன் சிசேரியன் அறுவைச் சிகிச்சையில் பங்கேற்ற 69 தாதியரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிசேரியன் சிகிச்சைகளின் போது வைத்தியர் ஷாபியு்டன் 70 தாதியர்கள் பணியாற்றியுள்ளனர். அவர்களுள் ஒருவரிடம் மாத்திரம் இதுவரை வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாதி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினாலேயே, அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது,