தாய் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்- கவிஞர் வைரமுத்து.!

breaking
கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இரும்புப்பாதை அதிகாரிகள் தமிழ் பேசக்கூடாதாம். ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த வேண்டாத விளையாட்டு” எனப் பதிவிட்டுள்ளார். தமிழ் நாட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணி புரிபவர்கள் தமிழ் மொழில் பேசத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை வெளியிட்டுவந்த நிலையில், குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.