வடக்கில் பாடசாலைகளில் இருந்து விலகிக்கொள்ளாத சிங்களப்படையினர்!

breaking
கொழும்புமற்றும் மட்டக்களப்பு பகுதிகயில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற குண்டு வெடிப்பினை தொடர்ந்து அவசரகால தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழ் இடங்களில் படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது ஸ்ரீலங்காவிற்கான பயண எச்சரிக்கையினை பல நாடுகள் தளர்த்தியுள்ள நிலையில் இன்றும் வடக்கு பகுதியில் தமிழர்களின் பாடசாலைகளில் படையினர் சோதனை செய்வதும் காவல் செய்வதும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக கல்விச்சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக வடக்கில் குண்டுதாக்குதல்கள் எதுவும் நடைபெறாத நிலையில் அதிகளவிலான படையினர் தற்போதும் குவிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக பாடசாலைகளுக்கு முன்னால் நிலைகொண்டுள்ள படையினர் இளம் தமிழ் யுவதிகளுடன் தொடர்பினை ஏற்படுத்த முனைகின்றார்கள். மருத்துவ மனைக்கு முன்னாள் நிக்கும் படையினர் அங்கு செல்லும் இளம் பெண்களுடன் கதைக்கமுற்படுவதும் சிலர் சிங்கள படையினருடன் கதைப்பதுமான செயற்பாடுகள் அரங்கேறப்பட்டுக்கொண்டு இருக்கின்றதை அவதானிக்க முடிந்துள்ளதாக வன்னியில் உள்ள புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறான நிலை தொடருமானல் படையினரின் பிரசன்னம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மாணவர்கள் அச்ச உணர்வுடனே பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கல்விச்சமூகம் சுட்டிக்காட்டுகின்றது.