தடுப்பில் உள்ளோரை பார்வையிட நீண்ட நேரம் காத்திருக்கும் முஸ்லிம் மக்கள்

breaking
  தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2 1ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அருகில் அவரது உறவினர்கள் பலர் நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர்.   சிறை வாசல்களில் தங்கள் உறவுகளை பார்வையிட கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் காத்திருந்தார்கள் அவர்களது காத்திருப்புகளிற்கு முடிவேதும் கிடைத்துவிடாத போது இப்போது முஸ்லீம் மக்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. முஸ்லீம்களும் தமிழர்களும் ஒரு மொழி பேசும் இனக்குழுமம் என்பதை உணராதவரை பேரினவாத சிங்களவர்களின் அடக்குமுறைகளிலிருந்து மீள முடியாது என்பது உண்மை