துனைவியாரை எற்றி இறக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட தவிசாளர்!

breaking
தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர். அதற்கான முழு நஷ்டத்தையும் சபைக்கு செலுத்துவதாக ஒப்புதல்... வலி. கிழக்கு பிரதேச சபையில் (14.06.2019) அன்று நடைபெற்ற சபை அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் வாகனத்தை தனது சொந்த பயன்பாட்டிற்கு அதுவும் தவிசளரின் துனைவியாரை சாவகச்சேரியில் உள்ள வங்கிக்கு எற்றி இறக்குவதாகவும் குறித்த தவிசளரின் வதிவிடமும் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு வெளியே அமைந்து இருப்பதாலும் வாகனம் சபையின் ஆளுகைக்கு உட்படாத வெளியே பவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் திரு .தவநாயகம் அவர்களினால் குறிப்பிட்ட ஒரு பிரேரனையை சபையில் சமர்ப்பித்து இருந்தார். எனினும் குறித்த பிரேரனை சபையில் விவாதத்திற்கு எடுக்கும் போது குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் தனக்கு செந்த கட்சி உறுப்பினருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரனை காரணமாக எழுந்த நெருக்கடி காரணமாக சபையில் இருந்து வெளியேறினார் . இருந்த போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்த பிரேரனையை விவாதத்திற்கு எடுத்தனர் அப்போது கருத்து கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் திரு. திருக்குமாரன் அவர்கள் எமது கட்சி யாழ் மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்க்கு எதிராக சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கவில்லை குறித்த யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சொந்தமாக ஒரு இடத்தினை கொண்டு இருந்தும் அதற்கு வரி செலுத்தும் போதும் அவரது வதிவிடம் மாநகர எல்லைக்குள் இல்லை என்று இதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கும் போது அதேபோல் வலி கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் எமது தவிசாளருக்கும் வாக்கு உரிமையும் இல்லை அவரது வதிவிடமும் வேறு ஒரு பிரதேச சபைக்கு உட்பட்டே இருக்கின்றது. ஆகவேதான் இந்த தவறான நடவடிக்கைகள் நடைபெறுகிறது எனவும் கூறினார் அதனை தொடர்ந்து அவரை தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்காமல் சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். அதன் பின்னர் பேசிய உறுப்பினர்கள் தவிசளரின் மனைவி சாவகச்சேரி பகுதியில் வேவைக்கு சொல்லதற்கும் இதே சபையின் வாகனமும் சபை பணத்தில் எரிபொருளும் பவிக்கபடுவதாக கூறினார் அதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர் அதற்கான இழப்பீட்டுத்தொகை சபைக்கு செலுத்துவதாக ஒப்புதல் அளித்தார் .
மணிவண்ணன் மீது ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர்க்கு உண்மையாக சபைக்கு வெளியே வசிக்கும் சபை எல்லைக்கு உள்ளே வாக்கு உரிமையில்லாத தனது கட்சி தவிசாளரை பற்றி தொரியாத என சாக உறுப்பினர்கள் தமக்குள் பேசிக்கொண்டு சொல்வதை அவதனிக்க முடிந்தது.குறித்த நபர் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆகவும் முன்னர் பதவி வகித்தார் என்பது கூடுதல் தகவல்.