சிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய்ப் பேச்சிற்கு ஆப்பு வைத்த ஆவா: கொக்குவிலில் அட்டகாசம்

breaking
  வடதமிழீழம்: யாழ்.கொக்குவில்- மஞ்சவனப்பதி ஆலய சுற்றாடலில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் பெற்றோல் குண்டு வீசியதுடன், வீட்டை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனா். இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அழைப்புவிடுத்திருந்த நிலையில் வன்முறைக் கும்பல் ஒன்று இந்தத் துணிகரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. எனினும் வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக தாக்குதலிருந்து தப்பித்துள்ளனர். மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள், மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின்றி எந்த இடத்திலும் பேச்சு நடத்த தான் தயார் என்று வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்திருந்தார்.அவர் அழைப்புவிடுத்து மூன்று தினங்களுக்குள் பகல்வேளை வீதியால் பயணித்த இந்த தாக்குதலை வன்முறைக் கும்பல் ஒன்று முன்னெடுத்துள்ளது. அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் சென்ற மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்கள் தனது நடவடிக்கையால் திருந்தி வாழ்கின்றனர் எனவும் அதற்கு அவர்களது பெற்றோர் தனக்கு நன்றி தெரிவித்திருந்தனர் என்றும் கூறிவிட்டுச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது