காணாமல் போனவீதியை தேடிய ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலாக படம் எடுக்கப்பட்டனர்
வடதமிழீழம்: யாழ்ப்பாண நகரப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட வீதியை தேடும் பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் இன்று மிரட்டப்படும் விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டனர்.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒரு வீதியினை காணவில்லை என்பதற்கு அமைவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களுடன் சென்ற ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரித்து கொண்டிருந்தபோது புதிதாகக் கட்டப்படும் கட்டிடவளகத்திற்குள் இருந்து மிரட்டும் தொனியில் ஊடகவியலாளர்களை விடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீடியோ எடுத்த நபர்களுடன் அந்த பாதைக்கும் குறித்த புடவைகடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சபையில் கூறிய மாநகர சபை உறுப்பினர் ஒருவரும் அருகில் நின்றார்என்பதும் குறிப்பிடத்தக்கது.