சிங்கள மக்கள் இல்லாத வட்டுவாகலில் பாரிய பௌத்த விகாரை!

breaking

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பலமுகாம்களில் நூற்றுக்கணக்கான பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன பௌத்த மத மக்கள் இல்லாத தமிழர்கள் பூர்வீகமாக வாழும் இடங்களில் இவ்வாறு பௌத்த விகாரைகளை சிறீலங்காப்படையினர் அமைத்துவருகின்றார்கள்.

அந்த வகையில் கடந்த 17.06.19 அன்று முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னிகள் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுள்ளது.

 ஆலயத்தினுடைய பாரம்பரிய முறைப்படியான கிரிகைகளை செய்கின்ற ஆலய வளாகமானது யுத்தத்தின்போது சிங்கள படையினரல் அபகரித்து குறித்த காணியில் பாரிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது

ஒரு பௌத்த மதத்தவர் கூட இல்லாத பழம்பெரும் ஆலய கிரிகைகள் இடம்பெறும் ஆலய வளாகத்தை சிங்கள படையினர் அபகரித்து பௌத்த விகாரை அமைத்துள்ளமையானது பல்வேறு நெருக்கடிகளையும் மக்கள் மத்தியில் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது

குறித்த விடயமாக ஆலய தரப்பு மற்றும் கிராம மடட அமைப்புக்களால் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனகவலை தெரிவித்துள்ளதுடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்