ராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன்! - ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 04

breaking

உமாமகேஸ்வரன் கொலை செய்யப்படுவதற்கு பின்னணியில் நின்று தூன்டுகின்ற சக்தி றோ என்பது வசந்தனுக்குத் தெரியாது. ஆதனால் உமாமகேஸ்வரனும் அதை அறியவில்லை. நுNனுடுகு ராஜனின் சதி வேலை என்றுதான் அவர் அதை நினைத்துக் கொண்டார். எனவே மாலைதீவுக்கான வேலைகள் எந்தவித தடங்களுமின்றி மும்முரமாக நடந்தன. தூக்குதல் குழுவினர் செல்வதற்கும், ஆயுதங்கள், தளபாடங்கள் கொண்டு செல்வதற்கும் வேண்டிய கப்பல் ஒன்று சிங்கப்பூரிலிருந்து வந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தரித்து நின்றது. இன்னொரு கப்பல் இலங்கைக்கு மேற்கே சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் என்றும் அதிலேயே தாக்குதல் குழுவினர் தரை இறங்குவதற்கான படகுகள் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. தூத்துக்குடியிலிருந்து ஆயுதங்களுடன் புறப்படும் கப்பல் இந்தக் கப்பலுடன் இணையும் பொது படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே தாக்குதல் குழுவில் ஒரு பகுதியினர் மண்டபத்திற்கு அண்மையிலிருந்த தீவில் தங்கியிருந்தனர். மறுபகுதியினர் முள்ளிக்குளம் பகுதியிலிருந்த PLOTE முகாமுக்கு அருகிலிருந்த சிறப்பு முகாமில் தங்கியிருந்தனர். விரைவில் அவர்களும் ஆயுதங்களுடன் மண்டபம் தீவுக்கு அனுப்பப்ட்டனர். 72 பேர் கொண்ட தாக்குதல் குழு புறப்படும் திகதியை எதிர்பார்த்து உமாமகேஸ்வரனின் தாக்குதலுக்காக காத்திருந்தது.

உமாமகேஸ்வரன் றோவின் சமிக்ஞைக்காக காத்திருந்தார். நீண்டநாள் தாக்குதல் குழுவை மண்டபம் தீவில் தங்கவைப்பது இரகசியம் வெளியாக வழிவகுத்துவிடும் என்பது அவரது அச்சம். றோ தாக்குதல் முடிந்த கையோடு உமாமகேஸ்வரனை கொலை செய்ய நுNனுடுக இன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தது. இவ்வாறாக ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டதால் சலிப்படைந்த உமாமகேஸ்வரன் நுவரெலியாவிற்குச் சென்று ஜே.வி.பி தலைவர் றோகன விஜயவீராவையும் செயலாளர் உபதிஸ்ஸ சடநாயக்காவையும் சந்தித்துப் பேசினார்.

றோ தன்னை ஏமாற்றினால் ஜே.வி.பியின் உதவியோடு அவர்களுக்குப் பாடல் படிப்பிக்கலாம் என்று அவர் எண்ணினார். 6 மணிநேரம் ஜே.வி.பி தலைவர்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான சிறிலங்கா அரசியல்வாதிகள் அவர்கள் பின்னால் நிற்கும் காடையர்கள் ஆகியோரை இருபகுதியினரும் இணைந்து கொலை செய்வது உட்பட பல்வேறு முக்கியமான விடயங்கள் பேசப்பட்டு உடன்பாட்டுக்கு வரப்பட்டன.

சங்கிலியை முள்ளிக்குளத்திற்கு அனுப்பியதால் தடைப்பட்டுப் போயிருந்த பயிற்சி விவகாரம் உமாமகேஸ்வரனுக்கு நம்பிக்கையான வேறு ஒருவர் மூலம் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு உமாமகேஸ்வரன் நுவரெலியாவில் ஜே.வி.பியினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி பயிற்சிமுகாம் அமைப்பதற்கான காட்டுப் பிரதேசங்களையும் (உமாமகேஸ்வரன் ஏற்கனவே அப்பிரதேசத்தில் நில அளவையாளராக கடமையாற்றியவர்) பார்வையிட்டுக் கொண்டிருந்த பொது அவரின் கொழும்புத் தொலை தொடர்பாளர் - றோ அவசரமாக தங்களுடன் தொடர்பு கொள்ளச் சொன்னதாகத் தகவல் கொண்டு வந்திருந்தார். ஊடனடியாக கொழும்பு திரும்பிய அவர் றோவுடன் தொடர்பு கொண்ட போது மாலைதீவிற்குப் புறப்படுவதற்கான சமிக்ஞை கிடைத்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இடைவெளியில் இரண்டு மூன்று தடவையாக மண்டபம் தீவிலிருந்து ஆயுதங்களும் ஆட்களும் கொஞ்சம் கொஞ்சமாக தூத்துக்குடிதுரைறமுகத்திலிருந்த கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இரவு 11 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அல் அகமத் என்று போலிப் பெயர் எழுதப்பட்ட அந்தக் கப்பல் 72 பேரையும் ஆயுதங்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. ஆந்தக்கப்பல் இலங்கை இந்திய கடல் எல்லைகளைத் தாண்டி சர்வதேச கடல் எல்லைக்குள் செல்லும் வரை சிறிலங்கா கடற்படையினரின் இடையுறுக்கு அல்லது சோதனைக்கு உட்பட விடாமல் தடுப்பதற்கு றோவின் ஏற்பாட்டின் பெயரில் இந்தியக் கடற்படைக்கப்பல்கள் ரோந்து புரிந்தன. சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த மற்றக்கப்பலுக்கு ஆளுயுதங்களும், போராளிகளும் மாற்றப்பட்டனர். ஆந்தக் கப்பலில் இருந்த அதிவேக விசைப்படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டன. இது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட கப்பல் தனது கடமையை முடித்துக் கொண்டு தனது பெயரை மாற்றுவதற்காக மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பியது. மற்றைய கப்பல் திட்டப்படி தனது பயணத்தைத் தொடர்ந்தது. மாலைதீ{வுக்கு 50 கிலோ மீற்றர் தூரத்தில் தாக்குதல்காரர்களையும், படகுகளையும் இறக்கிவிட்டு தானும் வழியை மாற்றிக் கொண்டு வேறிடம் சென்றுவிட்டது. ஆந்தக் கப்பல் தாக்குதல்காரர்களை இறக்கிவிடும் போது அதிகாலை 1 மணி. ஆவர்கள் முதல் நாள் இரவு 11 மணியிலிருந்து தொடர்ந்து கடல் பிரயாணம் செய்ததில் களைப்புற்றிருந்தார்கள். நல்ல மழையும் காற்றும் வேறு அடித்துக் கொண்டிருந்தது. ஆதிகாலை 2.30 மணி அல்லது 3 மணிக்குள் மாலைதீவிற்குள் பிரவேசித்தது. பெயருக்கிருந்த காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, அவரை கைது செய்வது என்பது திட்டம். 250 குதிரைச்சக்தி வேகம் கொண்ட 5 படகுகளையும் அவர்கள் அதிகபட்ச வேகத்துடன் இயக்கினார்கள். மணி 4 ஆகியும் மாலைதீவு வரவில்லை. காற்றிலும், மழையிலும் திசiமாறி மாலைதீவிலிருந்து 10 மணிநேரம் கூட ஓடிவிட்டார்கள். பின்பு தவறை உணர்ந்து திரும்பி வரும் போது காலை 5 மணியாகிவிட்டது. நிலம் வேறு வெளுத்துவிட்டது. 50 கலிபர் துப்பாக்கி பொருத்திய காவலரணிலிருந்த மாலைதீவு காவல் வீரர் தற்செயலாக கடற்கரையைப் பார்த்த போது திடு திடுப்பென ஆயுதங்களுடன் குழுவொன்று ஓடிவருவதைப் பாhத்ததும் திடுக்கிட்டுப் போய்விட்டார். நிலைமையின் பயங்கரத்தை உணர்ந்த அவர் கண் இமைக்கும் நேரத்தில் தனது துப்பாக்கியை அவர்களை நோக்கி இயக்க தாக்குதல் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தொலைத்தொடர்புக்கு பொறுப்பானவருமான ‘வசந்தி’ என்பவர் ஸ்தலத்திலேயே மூளை சிதறி பலியாகிவிட்டார். தாக்குதல் குழுவினர் அதிர்ந்து பொய் விட்டாலும் தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டு முன்னேறி காவல்நிலைகளை வீழ்த்தி ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றிக்கொண்டனர். ஆனால் ஜனாதிபதி அங்கில்லை. அவரின் நல்ல காலம் அன்று அவர் அங்கு தங்காமல் அருகிலுள்ள வேறு ஒரு தீவுக்குச் சென்றிருந்தார்.  அடுத்து என்ன செய்வதென்று தாக்குதல் குழுவினருக்குத் தெரியவில்லை. ஆவர்களைவ ந்து சந்தித்து தாக்குதலின் போது இணைந்து கொள்வதாகச் சொன்ன மாலைதீ{வுக்காரர்கள் காலை 4 மணிவரை பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். கொழும்பிலிருந்த உமாமகேஸ்வரனுடன் வானொலித் தொடர்பு கொண்டு அவரின் ஆலோசனையைக் கேட்பதற்குக் கூட அவர்கள் கொண்டு வந்த வானொலி தொடர்புச் சாதனம் வேறு மழை, காற்று காரணமாக ஒழுங்காக இயங்கவில்லை. ஏதைச் செய்வது எதைச் செய்யக்கூடாது என்ற வாய்த் தர்க்கத்தில் தாக்குதல் குழுவுக்குள்ளேயே இரண்டு பிரிவு உருவாகிவிட்டது. தோலைத் தொடர்புக் கோபுரத்தைத் தகர்க்க வேண்டும் அல்லது அதனூடு செய்திகள் தெளிவாக வெளியேவராமல் தடுக்கும் இடையூறு அலைகளை ஒலிபரப்ப வேண்டும் என்றது ஒரு குழு. அதெல்லாம் தேவையில்லை மாலைதீவு முழுவதற்கும் மின்வழங்கும் பிரதான மின் வழங்கு நிலையத்தை தகர்த்தாலே போதும் என்றது மற்றைய குழு. இவர்கள் இவ்வாறு முரண்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மாலைதீவு ஜனாதிபதி தான் தங்கியிருந்த தீவிலிருந்து சர்வதேச உதவி கோரி வானnhலியில் செய்தி அனுப்பிவிட்டார். சர்வதேச செய்தி நிறுவன செய்மதிகளுக்கு எட்டிய இந்தச் செய்தியை அவர்கள் உலகெங்கும் பரப்பினர். நல்ல முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்த றோவிற்கு தலையில் இடி விழுந்தால் போல் ஆகிவிட்டது. ராஜீவ்காந்தி பொறுக்க முடியாத ஆத்திரத்தில் றோ அதிகாரிகளை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார்.  மாலைதீவின் நட்பு நாடான பாகிஸ்தானோ அல்லது சீனாவோ, அமெரிக்காவோ, வேறெந்த நாடோ படைகளை அனுப்பிவிட்டால் உண்மை வெளியாகி இந்திய பயங்கரவாதத்தைத்தூண்டும் நாடு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவதோடு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக மோசமான அவமானத்தைத் தான் சந்திக்க நேரும் என்றும் ராஜீவ்காந்தி மிகவும் பயந்தார். ஆதனால் மற்றவர்கள் முந்துவதற்கு முன் தான் முந்திக் கொண்டு இந்திய விமானப் படைப்பிரிவு ஒன்றையும், கடற்படைப் பிரிவு ஒன்றையும் அங்கே அனுப்பி வைத்தார். இதிலே வேடிக்கை என்னவென்றால் தாக்குதல் குழுவினரை பாதுகாப்பாக மாலைதீவிற்கு அனுப்பி வைக்க காவல்புரிந்த இந்தியக் கடற்படைக் கப்பல்களே அவர்களைக் கைது செய்ய அங்கே சென்றது. இந்திய இராணுவம் உதவிக்கு வரும் செய்தி அறிந்ததும் தாக்குதல் குழுவினர் மாலைதீவு மந்திரிகள், அதிகாரிகள் என்று சிலரையும் பணயமாகப் பிடித்துக் கொண்டு மாலைதீவு துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து பின்வாங்கினார்கள். இந்திய விமானப்படை விமானங்கள் கப்பலுக்கு சேதமேற்படுத்தி கடலில் மூழ்கவைத்து தாக்குதல்காரர்களை கைது செய்து பயணக்காரர்களை மிட்டனர்.

சுதிப்புரட்சிக்கு முன் உமாமகேஸ்வரனால் இரகசியமாக மாலைதீவிற்கு அனுப்பி அங்கு தங்கவைக்கப்பட்ட ‘ரமேஸ்’ என்பவர் றோ அதிகாரிகள் மாலைதீவிற்கு நேரில் வந்து தங்களுடன் சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு இந்திய இராணுவத்தைக் கொண்டு கொலை செய்துவிட்டு விடயம் தெரியாதவர்களையே கைது செய்ததாகவும் முக்கிய ஆயுதங்களையும் அவர்கள் கடலில் மூழ்கடித்துவிட்டதாகவும் தகவல் அனுப்பினார்.

உமாமகேஸ்வரனுக்கு இதை வைத்து தன்னை அழித்துவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த றோவுக்கும், ராஜீவ் காந்திக்கும் தகுந்த பாடம் புகட்டி தனது இயக்க உறுப்பினர்களை மீட்க அவர் எண்ணினார். ஆதற்காக இரண்டு காரியங்களை செய்ய அவர் உத்தேசித்தார். முதலாவது ராஜீவ்காந்தியின் பிள்ளைகளைக் கடத்தி பயணம் வைப்பது. இரண்டாவது கொழும்பு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஒரு குழுவாக ஒரு பஸ்சுடன் சேர்த்து பணயம் வைப்பது. தொடரும்...

பணமும், ஆயுதமும் புளொட்டுக்கு வழங்கிய றோ! – ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 01 உமாமகேஸ்வரன் றோவின் சந்திப்பு! – ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 02 உமாமகேஸ்வரன் உருவாக்கிய கொலைகாரப் படை! – ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 03