எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம் , அதிர வைக்கும் வீடியோ.!

breaking
அறந்தாங்கி: "எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்" என்ற பெயரில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்ததுமே ஷாக் எகிறி போகிறது! அறந்தாங்கி கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்தவர் முருகன். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். விவசாயிகளின் பயிர்களை நாசம் செய்யும் எலிகளை பிடிக்க குத்தகை பேசி, எலிபிடிப்பதுதான் இவரது தொழில். பிடித்த எலிகளை வயல் காரர்களிடம் தந்து, குத்தகை பணத்தையும் வாங்கி விடுவார். இப்படி பிடிக்கப்படும் எலிகளை வீட்டிலேயே வைத்து உறித்து பதப்படுத்தப்படுகிறது. பிறகு, அறந்தாங்கி, பெரியாளூர், பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமங்களில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதாம். ஒரு எலி ரூ.20க்கு டாஸ்மாக்கில் வாங்கி கொள்கிறார்கள். அந்த எலியை பார்காரர்கள் துண்டுகளாக வெட்டி சமைத்து முயல் கறி என்று குடிமகன்களிடம் விற்பனை செய்கிறார்களாம். இது சம்பந்தமான ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. வீடியோவில் சம்பந்தப்பட்டவர் "ஆமாம்.. நான்தான் இதெல்லாம் செஞ்சது" என்று ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல நிற்கிறார். மற்றொரு நபரோ அவரை சுட்டிக்காட்டி இப்படி பேசுகிறார்: "வணக்கம். இவரு பேருதான் முருகன். அறந்தாங்கியை சேர்ந்தவர். நான் ஆயங்குடி கிராமத்தில் இருந்து பேசறேன். இப்போ இவரு எலி பிடிக்க போறாரு. இவரு எலியை பிடிச்சு என்ன பண்றார்..ன்னா, ஒயின் ஷாப்பில் கொண்டுபோய் கொடுத்து, முயல்கறின்னு ஏமாத்தி தந்துடறார். அதனால் ஒயின்ஷாப்புல வாங்கி சாப்பிட கறி எலிக்கறி! இவரு தெளிவா, எல்லாரும் பார்க்கிறபடி நிக்கிறாரு பாருங்க. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் (என்று சொல்லி சற்று தொலைவில் கொன்று குவித்து, பதப்படுத்தப்பட்ட எலிகளை காட்டுகிறார்). இந்த எலிக்கறியைதான், நண்பர்கள், மேற்பாங்காட்டில் இருக்கிற ஒயின் ஷாப்பிலும், பெரியாநல்லூரில் இருக்கும் ஒயின் ஷாப்பிலும் இந்த எலிக்கறியைதான் சாப்பிடறீங்க. நல்லா பார்த்துக்குங்க... இதை சப்ளை பண்றவர் நம்ம முருகன். இதைபத்தி இவரு கவலைப்பட மாட்டார். எந்த கோர்ட்டிலும் போய் வாதாடிக்குவார். நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்" என்று சொல்கிறார். இந்த வீடியோ உண்மைதானா, உண்மையிலேயே முருகன் என்பவர் எலிகளை பிடித்து விற்கிறாரா? என உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.