Take a fresh look at your lifestyle.

இலங்கை போன்று தமிழகத்தில் நாசவேலைக்கு சதியா.?

தமிழகத்தில் நாசவேலை நடத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புழல் சிறையில் உள்ள 3 தீவிரவாதிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது 7 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். உலக நாடுகளை இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்தது. இந்த குண்டுவெடிப்பில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்கொலை படையின் தலைவன்  ஹாசிமுடன் தொடர்பில் இருந்தவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு அது நடக்க முடியாததால் இலங்கையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தேறியது.

இலங்கை தாக்குதல் குறித்து இந்தியா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தும் அதை இலங்கை சட்டை செய்யவில்லை. குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகத்தில் சோதனை நடத்தினர். அப்போது தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

புழல் சிறையில் உயர்மட்ட பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இவர்களுக்கு இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.