Take a fresh look at your lifestyle.

குள்ள நரி ரணிலின் பொறியில் மாட்டிய மைத்திரி

 

இலங்கை அர­சி­யலில் மீண்டும் ஒரு புயலோ, பூகம்­பமோ உரு­வா­வ­தற்­கான கரு ‘சூல்’ கொள்ளத் தொடங்­கி­விட்­டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர், ஐ.தே.மு அர­சாங்­கமும், ஜனா­தி­ப­தியும் எந்தப் பிணக்­கு­மின்றி இருப்­பது போலக் காட்டிக் கொண்ட போலி­யான நிலை இப்­போது விலகிக் கொண்­டி­ருக்­கி­றது.

இந்த போலித் திரையை விலக்கி வைப்­ப­தற்கு கார­ணி­யாக அமைந்­தி­ருக்­கி­றது, ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு.

இந்த தெரி­வுக்­குழு அமைக்­கப்­பட்ட போது, இதன் பார­தூரத் தன்­மையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விளங்கிக் கொள்­ள­வில்லை.

ஆனால், அவ­ரையும், மஹிந்த தரப்­பையும், பொறிக்குள் தள்­ளு­வ­தற்­கென்றே, ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் இந்த தெரி­வுக்­கு­ழுவை உரு­வாக்­கி­யி­ருந்­தது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

அந்தப் பொறியை இன்றும் வலு­வா­ன­தாக மாற்றும் வகையில், வழக்­கத்­துக்கு மாறாக – இது­வரை நடந்­தி­ராத வகையில், பகி­ரங்­க­மாக விசா­ர­ணை­களை நடத்த, சாட்­சி­யங்­களைப் பெற அனு­மதி கொடுத்­தி­ருந்தார் சபா­நா­யகர் கரு ஜய­சூரிய.

ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்க்­கட்­சிகள் கொண்டு வந்­த­போது, அதனை முறி­ய­டிப்­ப­தற்­கான ஆயு­த­மா­கவும் அர­சாங்கம் இந்த தெரி­வுக்­கு­ழுவைப் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

தெரி­வுக்­கு­ழுவின் முதல் நாள் அமர்வில், பாது­காப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்­டே­கொ­டவும், தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்­டிஸும் சாட்­சியம் அளித்த பின்னர் தான், ஜனா­தி­பதி நிலை­மையின் தீவிரத் தன்­மையை உணர்ந்தார்.

தனது அதி­கா­ரத்தை வைத்து நேரடிச் சாட்­சி­யங்கள் தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பப்­ப­டாமல் தடுக்க முனைந்தார்.

ஆனாலும், எல்லா ஊட­கங்­களும் வரிக்கு வரி சாட்­சி­யங்­களை வெளி­யிட்ட போது தான், தமது தோல் தான் உரிக்­கப்­ப­டு­கி­றது என்று ஜனா­தி­பதி புரிந்து கொண்டார். அத்­துடன் எதிர்க்­கட்­சியும் தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்து கொண்டு கூச்சல் போடத் தொடங்­கி­யது.

கட்­டாய விடுப்பில் அனுப்­பப்­பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவும், பத­வியை விட்டு வில­கிய முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்­டோவும் சாட்­சியம் அளித்த பின்னர், ஜனா­தி­பதி இன்னும் கடுப்­பானார்.

அதற்­குள்­ளா­கவே அவர், இந்த தெரி­வுக்­குழு விசா­ர­ணையை இடை­நி­றுத்­து­மாறு சபா­நா­ய­க­ருக்கு கடிதம் அனுப்­பினார். அவர் அதனை கருத்தில் கொள்­ள­வில்லை.

பின்னர் அதனை ஒரு குற்­றச்­சாட்­டாக ஜனா­தி பதி முன்­வைத்த போது, அந்தக் கடி­தத்தை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முன் சமர்ப்­பிப்­பதா இல்­லையா என்று தீர்­மா­னிப்­பது தனது அதி­கா­ரத்­துக்கு உட்­பட்­டது என்றும், தெரி­வுக்­குழு விசா­ர­ணையை நிறுத்தும் அதி­காரம் தனக்கு கிடை­யாது என்றும் கூறி­யி­ருந்தார் சபா­நா­யகர்.

இதற்குப் பின்னர் நிலை­மைகள் மோச­ம­டைந்த போது, தான் பணியில் உள்ள எந்­த­வொரு அதி­கா­ரி­யையும் தெரி­வுக்­கு­ழுவின் முன்­பாக சாட்­சி­ய­ம­ளிக்க அனு­ம­திக்­க­மாட்டேன் என்று ஜனா­தி­பதி அறி­வித்தார். இதன் பின்பு மீண்டும் மோதல்கள் ஆரம்­ப­மா­கின.

அவ­ச­ர­மாக அமைச்­ச­ர­வையைக் கூட்­டிய ஜனா­தி­பதி, தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணையை நிறுத்த வேண்டும் என்றும், இல்­லா­விட்டால், அமைச்­ச­ரவைக் கூட்டம் உள்­ளிட்ட எந்­த­வொரு அரச நிகழ்­விலும் பங்­கேற்கப் போவ­தில்லை என்றும் அறி­வித்தார்.

ஆனால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, அமைச்­சர்­களோ அதற்கு இடம்­கொ­டுக்­க­வில்லை. தெரி­வுக்­கு­ழுவை நிய­மித்­தது பாரா­ளு­மன்றம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே அதற்­கான அதி­காரம் உள்­ளது என்று கைவி­ரித்து விட்­டனர்.

தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களை நிறுத்த ஜனா­தி­ப­திக்கு எந்த வகையில் அதி­காரம் இல்­லையோ அது­போலத் தான், பிர­த­ம­ருக்கும், சபா­நா­ய­க­ருக்கும், அமைச்­ச­ர­வைக்கும் அதி­காரம் கிடை­யாது.

ஆனாலும், பிர­த­ம­ரையும், அமைச்­ச­ர­வை­யையும் ஜனா­தி­பதி நெருக்­கடி கொடுப்­ப­தற்குக் காரணம், அவர்கள் மனது வைத்தால், பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தீர்­மா­னத்தைக் கொண்டு வந்து விசா­ர­ணை­களை நிறுத்த முடியும்.

அப்­ப­டி­யா­ன­தொரு முடிவை எடுக்­கின்ற நிலையில் ஐ.தே.மு அர­சாங்கம் இல்லை. ஏனென்றால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்­னைய அர­சாங்­கத்தில் இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு உள்ள தொடர்­பு­களை அம்­ப­லப்­ப­டுத்த இந்த விசா­ரணை முக்­கி­ய­மா­னது.

இந்த விசா­ர­ணை­களின் மூலம், அர­சாங்கம் 100 பற­வை­களை வீழ்த்தி விட்­டது என்று கொதித்­தி­ருக்­கிறார் மஹிந்த ராஜபக் ஷ. அவர் சொல்­வது சரி தான்.

இப்­போது மத்­திய வங்கி மோசடி மறந்து விட்­டது. ஈஸ்டர் தாக்­குதல் மறந்து விட்­டது. ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் விசா­ர­ணைகள் மறந்து விட்­டன. இப்­ப­டியே பல்­வேறு பிரச்­சி­னைகள் மறந்து விட்­டன. பல மூடி மறைக்­கப்­பட்டு விட்­டன.

அர­சாங்­கத்­துக்கு எதி­ராக எதிர்க்­கட்சி பெரும்­பா­டு­பட்டு கொண்டு வந்த பிரச்­சி­னை­களை எல்லாம் இப்­போது தெரி­வுக்­குழு தூக்கித் தின்று விட்­டது. இதுதான் மஹிந்­தவின் பிரச்­சினை.

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்­வதைப் போல ஒரு கல்லில் அர­சாங்கம் 100 பற­வை­களை வீழ்த்தி விட்­டது என்று அவர் பொரு­மி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பங்கு கொள்ளப் போவ­தில்லை என்று அறி­வித்­தி­ருந்த நிலையில், கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நடக்க வேண்­டிய அமைச்­ச­ரவைக் கூட்டம் நடக்­க­வில்லை. இந்த நிலை எது­வரை தொடரப் போகி­றது என்று தெரி­ய­வில்லை.

அடுத்­த­வாரம் அமைச்­ச­ரவைக் கூட்டம் நடக்கும் என்று கூறப்­பட்­டாலும், அது இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை உறு­தி­யா­க­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தை முடக்கி அல்­லது இப்­போ­தைய கூட்­டத்­தொ­டரை ஒத்­தி­வைத்து, தெரி­வுக்­குழு விசா­ர­ணை­களை நிறுத்தக் கூடும் என்­றொரு கதையும் அடிப்­பட்­டது. ஆனால், பொது­வாக, ஒரு கூட்­டத்­தொ­டரில் அமைக்­கப்­படும் தெரி­வுக்­கு­ழுக்கள், அந்தக் கூட்­டத்­தொடர் முடித்து வைக்­கப்­ப­டு­வ­துடன் காலா­வ­தி­யாகி விடும்.

ஆனால், ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தல்கள் குறித்து ஆராயும் தெரி­வுக்­குழு அப்­ப­டிப்­பட்­ட­தன்று. அது விசேட தெரி­வுக்­குழு. பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் ஒன்றின் மூலம் உரு­வாக்­கப்­படும் விசேட தெரி­வுக்­கு­ழுக்கள் செய­லி­ழந்து போகாது.

இதனால், பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்து மீண்டும் மூக்­கு­டை­படும் நிலையை ஜனா­தி­பதி ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

அதே­வேளை அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில், பங்­கேற்­காமல் ஒதுங்கிக் கொள்ளும் ஜனா­தி­ப­தியின் முடிவும் கூட, எந்­த­ள­வுக்கு புத்­தி­சா­லித்­த­ன­மா­னது என்ற கேள்வி உள்­ளது.

ஏனென்றால் அமைச்­ச­ர­வையை நிய­மிப்­பது, கலைப்­பது போன்ற அதி­கா­ரங்கள் ஜனா­தி­ப­திக்கு இருந்­தாலும், ஜனா­தி­ப­தியே அதற்கு கட்­டா­ய­மாக தலைமை தாங்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை. பிர­தமர் கூட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தைக் கூட்ட முடியும். அவ்­வா­றான கூட்­டங்­களும் நடந்­தி­ருக்­கின்­றன.

ஜனா­தி­பதி அடம்­பி­டிக்­கின்ற நிலையில், பிர­தமர் அமைச்­ச­ர­வையைக் கூட்டி முடி­வு­களை எடுக்க முடியும். ஜனா­தி­ப­தியின் முடி­வுக்கு மாறாக அமைச்­ச­ரவை பல முடி­வு­களை எடுக்­கின்ற போது, ஜனா­தி­பதி இல்­லாமல் அமைச்­ச­ர­வையைக் கூட்­டு­வதில் சிக்கல் இல்லை என்­கின்­றனர் சட்­ட­வல்­லு­நர்கள்.

இந்த விவ­கா­ரத்தில் ஜனா­தி­பதி தொடர்ந்தும் முரண்டு பிடித்தால், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே அமைச்­ச­ரவைக் கூட்­டத்தைக் கூட்டக் கூடும்.

இந்த விவ­கா­ரத்தில் எதிர்க்­கட்­சிகள் வேறு புகுந்து கொண்டு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து விட்டு தேர்­த­லுக்கு செல்­வதே சிறந்­தது என்று கூச்சல் எழுப்பிக் கொண்­டி­ருக்­கின்­றன.

வெந்த வீட்டில் பிடுங்­கி­யது அறுதி என்­பது போல இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு ஆட்­சியைப் பிடிக்க கனவு காண்­கி­றது மஹிந்த அணி.

அதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐ.தே.மு அர­சாங்­கத்­துடன் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதி­க­மாகி வரு­கி­றது. இதனை சரி செய்­வ­தற்கு இரண்டு தரப்­பு­க­ளுமே தயா­ராக இல்லை.

பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களின் இடத்­துக்கு ராஜித சேனா­ரத்ன, மலிக் சம­ர­விக்­ரம, ரஞ்சித் மத்­தும பண்­டார ஆகி­யோரை நிய­மிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேட்டுக் கொண்­டி­ருந்தார். ஆனால், ஜனா­தி­பதி அதனை ஏற்­க­வில்லை.

அந்­தந்த அமைச்­சுக்­களின் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்­களை பதில் அமைச்­சர்­க­ளாக நிய­மித்­தி­ருக்­கிறார். இது அர­சி­ய­ல­மைப்பு மீறல் என்று போர்க்­கொடி எழுப்­பு­கி­றது ஐ.தே.க.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தின்­படி, பிர­த­ம­ருடன் ஆலோ­சித்தே, அமைச்­சர்­களை ஜனா­தி­பதி நிய­மிக்க வேண்டும். ஆனால் பதில் அமைச்­சர்கள் நிய­மனம் குறித்து பிர­த­ம­ருடன் ஜனா­தி­பதி ஆலோ­சனை நடத்­த­வில்லை. அவ­ரது யோச­னை­யையும் புறக்­க­ணித்­தி­ருந்தார்.

மற்­றொரு சிக்­கலும் கிளம்­பி­யி­ருக்­கி­றது. ஒரு அமைச்சர் வெளி­நாடு சென்­றாலோ, சுக­வீ­னத்­தினால் செயற்­பட முடி­யாமல் போனாலோ தான், பதில் அமைச்­சரை நிய­மிக்க முடியும். பதவி வில­கிய அமைச்­சர்­க­ளுக்கு பதில் அமைச்­சர்­களை நிய­மித்­தமை அர­சி­ய­ல­மைப்பு மீறல் என்று உச்­ச­நீ­தி­மன்றில் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்­சிகள் நடப்­ப­தா­கவும் தகவல்.

ஏற்­க­னவே பாரா­ளு­மன்றக் கலைப்பு விட­யத்தில், ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்பை மீறி­விட்டார் என்ற குற்­றச்­சாட்டு இருக்கும் நிலையில் மீண்டும் அதே­போன்­ற­தொரு குற்­றச்­சாட்டு அவரை நோக்கி வந்­தி­ருக்­கி­றது.

இந்த நிலையில், அடுத்து என்ன நடக்­கப்­போ­கி­றது என்ற கேள்­வியும் அச்­சமும் சாதா­ரண மக்­களைத் தொற்றிக் கொண்­டி­ருக்­கி­றது, கடந்த ஒக்­டோபர் 26ஆம் திகதி ஆட்­சிக்­க­விழ்ப்பும் அத­னை­ய­டுத்து ஏற்­பட்ட குழப்­பங்­களும் நாட்டில் பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தின.

அதனை ஒத்த இன்­னொரு நிகழ்வை நாட்­டி­லுள்ள மக்கள் யாருமே விரும்­ப­வில்லை. எனவே இந்த முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதே சாதா­ரண மக்­களின் எதிர்­பார்ப்பு.

ஆனால் அர­சியல் தலை­மை­களோ விட்­டுக்­கொ­டுப்­புக்கோ, சம­ர­சத்­துக்கோ தயா­ராக இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. ஏட்­டிக்குப் போட்­டி­யாக நடந்து கொள்­கி­றார்கள். நாட்டைப் பற்­றிய கவ­லை­களே அவர்­க­ளிடம் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

திடீ­ரென கடந்த புதன்­கி­ழமை 3 நாள் பய­ண­மாக சிங்­கப்பூர் புறப்­பட்டுச் சென்றார் பிரதமர். அவரையடுத்து மறுநாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

நாட்டை நிர்வகிக்க வேண்டிய இரண்டு தலைவர்களும் இல்லாமல், நாடு இருக்கின்ற நிலை பாரதூரமானது, இதுபோன்ற நிலை முன்னரும் ஓரிரு தடவைகள் ஏற்பட்டிருக்கின்றன.

அப்போது நிலைமைகள் அச்சத்துக்குரியதாக இருக்கவில்லை. ஆனால் இப்போது, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரும், இரண்டு தலைவர்களும் இல்லாத நிலை என்பது சாதாரணமான ஒன்றல்ல.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தபோது, ஜனாதிபதி நாட்டில் இல்லாததால், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பலத்த இழுபறிகள் ஏற்பட்டன. பாதுகாப்புச்சபையைக் கூட்டி முடிவெடுப்பதற்கிடையில் போதும் போதும் என்றாகியிருந்தது.

இப்படியான நிலையில் இரண்டு தலைவர்களும் இல்லாமல் நாடு இருந்த சூழலை நம்பிக்கையின் உச்சமாக எடுத்துக் கொள்வது அபத்தமானது, அதனை முட்டாள்தனமான நம்பிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற முட்டாள்தனமான நம்பிக்கை தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் வழி வகுத்தது என்பதை மறந்து விடக்கூடாது.

  • நன்றி – வீரகேசரி

முக்கிய குறிப்பு:

%d bloggers like this: