ஸ்ரீலங்காவில் அவசரகால சட்டம் குறைவான காலப்பகுதிக்கே அமுல்ப்படுத்தப்பட வேண்டும்!

breaking
ஸ்ரீலங்காவில் அவசரகால சட்டம் குறைவான காலப்பகுதிக்கெ அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்! கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் ஆயுத தாரிகள் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பினை தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசினால் அவசரகாலதடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இரண்டு மாங்களாக நீடிக்கப்பட்டு மேலும் யூலை 21 வரை நீடிக்கப்பட்டுள்ளது இது வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 41வது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் மனிதஉரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இதனை தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் அவசரகால சட்டத்தை மிகவும் குறைவான காலப்பகுதிக்கு மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நேற்று ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 41வது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஆணையாளர் இதனை தெரிவித்தார். பேரவையில் நீண்ட அறிக்கையை வாசித்த  ஆணையாளர், பல்வேறு நாட்டு மனித உரிமை நிலவரங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்தார். இலங்கை குறித்த நிலைப்பாட்டை விளக்குகையில், இலங்கையில் இரண்டு மாதங்களின் முன் நடந்த பயங்கரவாத தாக்குதல் அங்கு பதற்றத்தை அதிகரித்திருப்பது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறேன். ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்குமிடையிலான ஒன்றிணைந்த அணுகுமுறையின் பலவீனமான தன்மையே பாதுகாப்பு தரப்பினர் அனைத்து பிரஜைகளிற்கும் பாதுகாப்பை வழங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சில முக்கிய மனித உரிமை விடயங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சில மதத்தலைவர்களின் வன்முறைகளை ஊக்குவிக்கும் கருத்துக்கள் என்பன என்னை கவலையடைய செய்துள்ளன. இந்த விடயம் சரியாக கையாளப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அவசரகால சட்டமானது மிக குறைவான காலப்பகுதிக்கெ அமுல்ப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அரசியல், மதத்தலைவர்களையும் சமூகத்தலைவர்களையும் ஒன்றிணைத்து வன்முறைகள் மற்றும் அநீதிகள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆராய்வதே மிக முக்கியமானது. இந்த விடயங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கும் மிக முக்கிய மற்றும் ஊக்குவிக்கத்தக்க வகையிலான வேலைத்திட்டங்களிற்கு எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என்றார்.