Wi-Fi வலயங்கள் நிறுவ முயற்சி வடக்கில் பாதுகாப்பான புகையிரத கடவைகளா?

breaking
நாடளாவிய ரீதியிலுள்ள 53 ரயில் நிலையங்களில் 89 Wi-Fi வலயங்களை நிறுவுவதற்கு முன்னணி இணைய சேவை வழங்குநர்கள் தீர்மானித்துள்ளதாக, கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்தது. ஆனால் வடக்கு கிழக்கில் பாதுகாப்பான புகையிரத கடவைகள் இல்லாததாலும் புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாமலும் தமிழர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட ஒரு குறுகிய காலத்தில் மாத்திரம் புகையிரதத்தில் மோதுண்டு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தமிழர்களின் கால்நடைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டுகொள்ளதா சிங்கள அரசு புகையிரத நிலையங்களில் இணைய சேவையினை வழங்க முன்வந்துள்ளார்கள். வடக்கில் உள்ள புகையிரத கடவை ஊழியர்கள் நாள்தோறும் 250 ரூபா சம்பளத்திற்கே தற்காலிக பணி செய்கின்றார்கள் ஆனால் அவர்களை இதுவரை நிதந்தர நியமனமாக்காமல் அவர்களை இழுத்தடிப்பு செய்வதன் ஊடாக தமிழர்களை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக சிங்கள அரசு ஈடுபட்டுள்ளது. இன்னிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் 450 வரையான புகையிரத கடவை காப்பாளர்கள் காணப்படுகின்றார்கள் இதுவரை இவர்களை நியமனமாக்கி பாதுகாக்பான புகையிரத பயணத்தினை வடக்கிற்கு மேற்கொள்ள சிங்கள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை புகையிரத்தில் மோதி சாகுங்கள் என்ற நினைப்பிலேயே வவுனியா,கிளிநொச்சி,யாழ்ப்பாணம் வரையான புகையிரத பாதையினை அமைத்துள்ளமைகுறிப்பிடத்தக்கது பல இடங்களுக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் இல்லாத நிலை தொடர்கின்றமை இதானல் தொடர்சியாக தமிழர்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறான நிலையில் வடக்கின் அபிவிருத்தி ரணில் கையில் இருந்து வருகின்றபோதும் அதனை பற்றி கூட்டமைப்பின் எம்.பி மார்கள் எதுவித கதையும் பேச்சும் அற்ற நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்காத நிலையில் தொடர்ச்சியாக அரசிற்கு முண்டு கொடுக்கும் செய்றபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.