யாழில் கூடிக்கலைந்த முதியோர் கூட்டம்!

breaking
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக்குள் எவ்வாறேனும் தலையை நீட்டிவிடும் கனவுடன் கிழக்கிலிருந்து யாழ்.வந்தவர்களை குட்டித்திருப்பி அனுப்பியுள்ளது அதன் தலைமை.
கட்சியின் பொதுச்செயற்குழு கூட்டம் இன்று யாழில் நடந்தது. கடந்த முறை பதவியில் இருந்தவர்களே, அடுத்த பதவிக்காலத்திற்கும் பதவியில் இருப்பார்கள்.கட்சியின் முக்கிய பதவிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளில் மாற்றம் நடக்கவில்லை.
தலைவராக மாவை.சேனாதிராசாவும், செயலாளராக கி.துரைராசசிங்கமும், பொருளாளராக கனகசபாபதியும் தொடர்வார்கள் என கட்சியால் அறிவிக்கப்பட்டது.
கட்சி வரலாற்றில் முதன்முறையாக- என்றும் இல்லாத புதுமையாக- நிர்வாகிகள் பெயரை மாவை சேனாதிராசாவே எழுதி வைத்து வாசித்தார்.
செயலாளர் பதவிக்கு கி.துரைராசசிங்கத்தை நியமித்துள்ளதாக மாவை சேனாதிராசா அறிவிக்க, அதை மட்டக்களப்பு எம்.பி சீ.யோகேஸ்வரன் எதிர்த்தார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி, பா.அரயநேந்திரனின் பெயரை பிரேரித்தார். குலநாயகத்தின் பெயரும் போட்டிக்கு பிரேரிக்கப்பட்டது.
எனினும், இரா.சம்பந்தன் தலையிட்டு, மூவரிற்குமிடையிலான வாக்கெடுப்பு நடத்த வேண்டியதில்லை, துரைராசசிங்கமே செயலாளராக தொடரட்டும் என்றார்.
இதன் மூலம் கிழக்கில் அரியநேத்திரனிற்கு பதவியை பெற்றுக்கொடுக்கும் முயற்சி தடைப்பட்டுப்போனது.