அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்

breaking
[video width="1280" height="720" mp4="http://www.thaarakam.com/wp-content/uploads/2019/07/porattam.mp4"][/video] இலங்கையில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, யாழில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் போது அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. அதேநேரம், ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே’ என்றும் ‘சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும்’ என்றும் போராட்டக்காரர்களினால் கோஷங்களும் இதன்போது எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி சுகாஷ், கட்சியின் மகளீர் அணித் தலைவி உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.