தாண்டிக்குளத்தில் பத்து மாடுகளை பலி எடுத்த புகையிரதம்!

breaking
வடக்கில் மக்களின் வாழ்வாதாரமாக கால்நடைகள் காணப்படுகின்றன ஒருபக்கம் கால்நடைகளை களவாடி இறச்சிக்காக கொண்டு செல்லும் கும்பல் மறுபுறத்தில் வடக்கின் புகையிரதப்பாதையில் நாள்தோறும் மக்கள் உயிர்கள் முதல் மக்களின் கால்நடைகள் வரைகொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றன. அந்தவகையில் இன்ற வவுனியா புகையிரத நிலையவீதியில் புகையிரதத்தில் மோதி பத்து மாடுகள் உயிரிழந்துள்ளன. வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை தொடருந்து மோதி 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி தொடருந்து, கடவையின் அருகே கூட்டமாக நின்ற மாடுகளை மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்படுகிறது