ஒதியமலையில் விவசாய கிணற்றிற்குள் தவறிவீழ்ந்த யானை!

breaking
இது தொடர்பில் கிராம வாசிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கிணற்றில் வீழ்ந்த யானையினை பாதுகாப்பாக மீட்டுள்ளார்கள்.
குறித்த பகுதியில் காட்டு யானைகளில் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ச்சியான யானைத்தொல்லை அதிகரித்து காணப்படுவதால் மக்களின் பயன்தரு வாழ்வாதார மேட்டுநில பயிர்செய்கைஅழித்து வருவதாகவும் பல தடவைகள் யானை தொல்லையினை கட்டுப்படுத்த கோரியும் யானை வேலி அமைக்ககோரியு பல தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை அருகில் உள்ள வெலிஓயா பிரதேசத்தின் எல்லைப்பகுதிகளில் யானைவேலி அமைக்கப்பட்டுள்ளன தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.