நீண்டகாலத்தின் பின்னர் ஜயங்கன் குளத்தில் மருத்துவர் விடுதி!

breaking
  துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட ஜயங்கங்குளம் வைத்தியசாலையில் 7.5 மில்லியனில் வைத்தியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது! முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜயங்கங்குளம் வைத்தியசாலைக்கு வைத்தியர் விடுதி அமைத்தலுக்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் முயற்சியில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 01.07.2019 அன்று சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.